• அரட்டை அரங்கம்

  • Its a Tea Kadai Bench
Its a Tea Kadai Bench
 #25  by AwardCity
 February 25th, 2010, 11:54 am
templecity wrote:Image

:? :? :? :? :?
Finance company reopen their premises.

மதுரை:மதுரையில் நேற்று முன்தினம் திடீரென மூடப்பட்டு. பணம் முதலீடு செய்த பல வாடிக்கையாளர்களின் வயிற்றை கலக்கிய"கிரீன் லைப்' நிதி நிறுவன அலுவலகம் போலீஸ் முன்னிலையில் நேற்று திறக்கப்பட்டது.துபாயை தலைமையிடமாக கொண்டு இந் நிறுவனம் செயல்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செலுத்தினால், நான்கு மாதம் தலா 40 ஆயிரமும் மற்றும் ஐந்தாவது மாதம் ஒரு லட்சம் ரூபாய் திருப்பி வழங்குவதாக அறிவித்தனர். இதை நம்பி ஏராளமானோர் இந் நிறுவனத்தில் லட்சக்கணக்கில் டெபாசிட் செய்தனர்.கடந்த பிப்.,23ம் தேதி இரவு அலுவலகத்தை காலி செய்து விட்டதாக வாடிக்கையாளர்களுக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் அலுவலகத்தை பலர் முற்றுகையிட்டனர். போலீசார் அவர் களை சமாதானம் செய்து அனுப்பினர். நேற்றும் வாடிக்கையாளர்கள் அங்கு குவிந்தனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் தொடர்பு கொண்ட இந்நிறுவன இயக்குனர் ஷோபியா, 20 நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக கூறியதாக தெரிகிறது.இதையடுத்து இந்நிறுவன ஊழியர்கள் மற்றும் கட்டட உரிமையாளர் ஆகியோர் போலீஸ் முன்னிலையில் நேற்று அலுவலகத்தை திறந்தனர்.இந்நிறுவன ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் கூறியதாவது:கடந்த 22ம் தேதி மாலை 4.30 மணி வரை ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் வாடிக்கையாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. கமிஷன் தொகை மட்டும் இரண்டு கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கோவை மேலாளர் 20 கோடி ரூபாயுடன் தலைமறைவானதால் பிரச்னை ஏற்பட்டது. 20 நாட்களில் பணம் முழுவதும் பட்டுவாடா செய்யப்படும். '' என்றார். வாடிக்கையாளர்கள் தற்காலிக சமாதானத்துடன் புறப்பட்டு சென்றனர்.
 #32  by shivamdu
 February 25th, 2010, 4:25 pm
shivamdu wrote:300 new buses are waiting at Madurai tempo for the past 3 months...

For whom these buses are bought? and for whom it is still waiting??

Image
 #61  by AwardCity
 February 27th, 2010, 8:16 am
"மதுரை எஸ்.எஸ்., காலனியில் குடிநீரில் சாக்கடை கலந்து வருவதை தடுக்க, புதிய பைப் லைன்கள் அமைக்கப்படும், என மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் தெரிவித்தார்.மதுரை பைபாஸ் ரோட்டில் திறந்தவெளி சாக்கடைஓடை அமைக்கும் பணி நடந்து வருவதால், கடந்த சில நாட்களாக குடிநீரிலும் சாக்கடை நீர் கலந்து வருகிறது. இதனை சரிசெய்ய மாநகராட்சியிடம் வலியுறுத்தப்பட்டது. சாக்கடைநீர் கலந்து வரும் இடங்களை அதிகாரிகளுடன் ஆய்வு செய்த கமிஷனர் செபாஸ்டின், ""இப்பகுதியில் அமைக் கப்பட்டுள்ள குடிநீர் பைப் லைன்கள் நாற் பது ஆண்டுகளானவை. இவை விரைவில் மாற்றப்பட்டு, புதிய பைப் லைன்கள் அமைக் கப்படும்,'' என்றார். தலைமை பொறியாளர் சக்திவேல், கவுன்சிலர் சுப்புராம் உடனிருந்தனர்"

Actually we are facing this problem for many days. Just now corporation accepted and planning to change pipes. But When? :crazy:
 #89  by Madurai
 March 2nd, 2010, 11:14 pm
Sellur ROB got into this crap between Railways/Highways and the residents nearby. The subway was supposed to be a relief. Now, that's also in such a mess. :oops:
 #91  by Madurai
 March 3rd, 2010, 1:34 am
sixthsense wrote:What is the status about TVS Nagar - Planganatham subway? Can any one update? :?:

Nothing great. In this budget, this ROB got a paltry fund of Rs.25 Lakhs. I don't think we can expect any progress in the near future, unless JNNURM provides the much needed funds.

Same status is applicable for both the ROBs at Tirupparankundram.
 #107  by templecity
 March 5th, 2010, 6:52 am
Yet another finance company closed. :bash:

மதுரையில் நிதிநிறுவனம் நடத்தி மோசடி செய்வது தொடர் கதையாக நடக்கிறது. தற்போது, மதுரை பைபாஸ் ரோடு சந்திரகாந்திநகரில் உள்ள "பார்ச்சூன் பையர் ப்யூச்சர் அக்ரோ பிரைவேட் லிட்.,' என்று நிதிநிறுவனம் புகாருக்கு ஆளாகியுள்ளது.


இந்நிதிநிறுவனத்தில், 10,000 ரூபாய் டெபாசிட் செய்தால், 40 நாட்களுக்கு பிறகு ஒவ்வொரு மாதமும் 2,000 ரூபாய் பெறலாம் என்பதை அறிந்து, 5,000 ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை 500 க்கும் மேற்பட்டோர் டெபாசிட் செய்தனர். பெரும்பாலும் கருப்பாயூரணி, கரும்பாலை, கே.கே.நகர், புளியங்குளம் மற்றும் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தினரே டெபாசிட் செய்துள்ளனர்.


இந்நிலையில், நிதிநிறுவனம் மூடிவிட்டதாக கூறி, நேற்று பாதிக்கப்பட்டோர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். கமிஷனர் இல்லாததால், அவர்கள் பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, நிதிநிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.காலனி நாகராஜன், மனைவி கிருஷ்ணவேணி, பார்த்திபன், மேலபொன்னகரம் தங்கவேலு, ஆத்திக்குளம் முத்துகுமார் ஆகியோர் மீது புகார்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Courtesy: Dinamalar
 #155  by shivamdu
 March 10th, 2010, 6:18 am
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து ஒரு கி.மீ., தூரத்திற்குள், அரசு உத்தரவை மீறி, 27 அடி உயரத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ள 250 கட்டடங்களை, கோயில் பாதுகாப்பு கருதி இடிக்க, மாநகராட்சிக்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பிஉள்ளது.தமிழகத்தில் உள்ள புராதன கோயில்களின் சுற்றுப்புறத்தை பாதுகாக்கவும், கோபுர அழகை ரசிக்கவும், "கோயிலில் இருந்து ஒரு கி.மீ., தூரத்திற்குள் 27 அடி உயரத்திற்கு மேல் கட்டடம் கட்டக்கூடாது' என, 1997ல் அரசு உத்தரவிட்டது. ஆனால், மதுரையில் கடந்த 10 ஆண்டுகளில், மீனாட்சி அம்மன் கோயில் கோபுரத்தையே மறைக்கும் அளவிற்கு கட்டடங்கள் விஸ்வரூபம் எடுத்தன. இதற்கு மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி களின் ஆதரவும் உண்டு. இதுகுறித்த புகார்கள் வர, 2004ல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு, கட்டடங்கள் கட்ட அனுமதியளித்தது விசாரணையில் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட 29 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைதொடர்ந்து, கோயில் பகுதியில் அரசு உத்தரவு மீறப்படாமல் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. சில நாட்களுக்கு முன், வடக்கு சித்திரை வீதியில் உள்ள தனியார் கடை ஒன்று, 27 அடி உயரத்திற்கு மேல் கட்டடம் கட்ட முயற்சித்தது. :bash:

"இதற்கு எப்படி அனுமதி அளித்தீர்கள்' என்று மாநகராட்சிக்கு, போலீஸ் உதவி கமிஷனர் வெள்ளைத்துரை நோட்டீஸ் அனுப்பினார். பதில் அளித்த மாநகராட்சி, "சமீபகாலமாக யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. :bash: கோயிலைச் சுற்றி 27 அடி உயரத்திற்கு மேல் உள்ள கட்டடங்கள், 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை' என தெரிவித்தது. :bash: இதற்கிடையே, "உயரமான கட்டடங்கள் இருப்பது கோயில் பாதுகாப்பிற்கு ஏற்றது அல்ல' என, மத்திய உளவுத்துறை எச்சரித்தது. இதை அடிப்படையாக வைத்து, விதிமுறையை மீறி கட்டப்பட்டுள்ள 250 கட்டடங்களை இடிக்க வேண்டும் என்றும், தேவையான பாதுகாப்பை தாங்கள் அளிப்பதாகவும் மாநகராட்சிக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 8