All About Madurai Now AAM on your Mobile

 All About Madurai » Madurai Chat - அரட்டை அரங்கம்
 அரட்டை அரங்கம்

Username: Remember Me?
Password:


Post new topic Reply to topic
 Page 3 of 8  [ 120 posts ]  »
August 27th, 2010, 9:51 am Top


I made 5 votes for our Sachin with my 5 different email ids :D


  Reply with quote 

#

August 31st, 2010, 6:55 am Top


சமீப காலமாக மதுரையில் "டக... டக...' வென சத்தத்துடன் ரோட்டையே கதிகலங்கச் செய்யும் வகையில் ஆட்டோக்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. சாதாரண ஆட்டோக்கள் மதுரை மக்களை அல்லாடச் செய்தன என்றால், தற்போது டீசல் ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகரித்து பாதசாரிகளையும், வாகனங்களையும் முட்டித் தள்ளிவிடும் வகையில் மூர்க்கத்தனமாக ரோடுகளில் மூச்சிறைக்க ஓடுகின்றன. இவை குறுக்கும், நெடுக்குமாக வளைந்தும், திரும்பியும், நுழைந்தும் அலைந்து திரிகின்றன. பஸ்ஸ்டாப்புகளில் பயணிகளை கண்டால் கொண்டாட்டம் போடும் இந்த ஆட்டோக்கள் ஸ்டாப்பில் நின்று கூவுகின்றன. டவுன் பஸ்கள் வந்தாலும் அவற்றை கண்டு கொள்வதில்லை. இதனால் பஸ்கள் நடுரோட்டில் நின்று செயற்கை நெரிசலை ஏற்படுத்துகின்றன. பயணிகள் ஏறிய பின், திடீரென கிளம்பும் இவை, பின்னால் வாகனங்கள் வருகிறதா என்றெல்லாம் கவனிப்பதில்லை. ரோட்டின் பக்கவாட்டில் பயணிகள் யாராவது நிற்கிறார்களா என்ற கவனத்தில் செல்வதால் விபத்துக்கள் தினமும் நடக்கின்றன. காமராஜர் ரோடு, பைபாஸ் ரோடு, ஆரப்பாளையம், அரசரடி ரோடு, புதுஜெயில் ரோடு, சிம்மக்கல், செல்லூர், அரசு ஆஸ்பத்திரி ரோடு, கோரிப்பாளையம் என எல்லா ரோடுகளிலும் இவற்றின் ஆதிக்கம் வியாபித்துள்ளது. அவற்றை கட்டுப்படுத்தாவிட்டால் விபத்துக்கள் தொடர்கதையாகும். :bash: :bash: :bash:


  Reply with quote 

#

October 7th, 2010, 7:08 am Top
Active Member
Joined: February 24th, 2010, 9:30 pm
Posts: 55
Has thanked: 0 time
Been thanked: 0 time


Vote Sachin wrote:
I made 5 votes for our Sachin with my 5 different email ids :D


Sachin won 2 awards... :dance:

1. Public Choice of the year 2009
2. Best cricketer of the year 2009


Offline
Profile 
  Reply with quote 

#

October 20th, 2010, 12:51 pm Top
Super Member
User avatar
Joined: February 24th, 2010, 3:26 pm
Posts: 133
Has thanked: 0 time
Been thanked: 0 time


நீயா, நானா ? – கருத்து மகா யுத்தம் – சத்யா
‘துணைவேந்தர் ஒருவர் தி.மு.க. எம்.எல்.ஏ.வால் தாக்கப்பட்டார்; இரு அட்வகேட் கமிஷனர்கள் மீது தி.மு.க. கௌன்ஸிலர்கள் தாக்குதல்; பஸ்ஸை வழிமறித்து டிரைவரையும், கண்டக்டரையும் தி.மு.க. கௌன்ஸிலரின் மகனும் அவரது நண்பர்களும் தாக்கினர்; ஆளும் கட்சிக்கு வேண்டிய டி.வி. உயர் அதிகாரியின் அடியாட்கள் நட்சத்திர ஹோட்டலை அடித்து நொறுக்கினர் – என்றெல்லாம் சமீபகாலமாக அச்சமூட்டும் செய்திகள் பத்திரிகைகளில் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆளும் கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே அப்படி என்னதான் பிரச்சனை? இரு தரப்பினரையும் சந்திக்க வைத்து சமரசம் ஏற்படுத்த விஜய் டி.வி.யோ, கலைஞர் டி.வி.யோ இப்படி முயற்சிக்கலாமே!


நிகழ்ச்சித் தொகுப்பாளர் : வணக்கம். ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு கோல்ட் வார் – மௌன யுத்தம் – நடக்கிறது வழக்கமானதுதான். சமீபகாலமாக அந்த மௌனம் கலைஞ்சு நேரடியாகவே மோதிக்கிற நிகழ்ச்சிகள் நடக்க ஆரம்பிச்சிருக்குது. இதுக்கு அடிப்படை காரணம் என்னன்னு நினைக்கிறீங்க?

தி.மு.க. எம்.எல்.ஏ. : நாங்க ஏற்கெனவே, கூட்டணியிலே ஏதாவது பிரச்சனை வந்துடுமா, அப்படியே கூட்டணி தொடர்ந்தாலும், மறுபடியும் எம்.எல்.ஏ. ஸீட் கிடைக்குமா, கிடைச்சாலும் ஜெயிக்கிறதுக்கு எத்தனை கோடி செலவு பண்ண வேண்டியிருக்குமோ, ஆட்சி மாறி வழக்கு, கிழக்கு வந்துட்டா என்ன பண்றதுன்னு ஏகப்பட்ட டென்ஷனோட மக்கள் பணியாற்றிகிட்டிருக்கோம். எங்க நிலைமை புரியாம பொதுமக்கள் எங்களைப் புண்படுத்தற மாதிரி நடந்துக்கறதுதான் அடிப்படைக் காரணம்.

குடிமகன் : எங்களுக்கும்தான், காலாகாலத்திலே பஸ் கிடைச்சு வேலைக்குப் போக முடியுமா, வீட்டுக்குப் போனா கரெண்ட் இருக்குமா, குழாய்லே தண்ணி வருமா, கொசுக்கடியை எப்படிச் சமாளிக்கிறது, பையன் ஸ்கூல்லே இன்னைக்கு கூடுதலா எவ்வளவு ஃபீஸ் கட்டச் சொல்லியிருப்பாங்களோன்னு ஆயிரம் டென்ஷன் இருக்குது. நாங்க கஷ்டத்தோட வாழப் பழகிக்கலை...?

நி.தொ. : இருதரப்பிலும் டென்ஷன் இருக்குதுன்னு சொல்றீங்க. இது ஒரு நல்ல பாயின்ட். ஆனா மோதல் ஏன் வருது? எப்படி ஆரம்பிக்குதுன்னு சொல்ல முடியுமா?

குடிமகன் : நான் ஒருதடவை ரோடுலே நடந்து போயிட்டிருந்தேங்க. லெஃப்ட் ஸைட்லே ஈ.பி.காரங்களும் ரைட் ஸைட்லே கார்ப்பரேஷன்காரங்களும் பள்ளம் தோண்டியிருந்தாங்க. நடுவிலே சேறும் சகதியுமா கொழகொழன்னு இருந்ததாலே, ஒரு மாதிரி நேக்கா நடந்து போயிட்டிருந்தப்போ, எதிர்லே ஒரு கார் வேகமா வந்து ஹாரன் அடிச்சுது. எந்தப் பள்ளத்திலே குதிக்கிறதுன்னு நான் யோசிக்கிறதுக்குள்ளே, கார்லேர்ந்து நாலஞ்சு பேர் இறங்கி வந்து என்னை அடிச்சுட்டாங்க...

நி.தொ. : யார் அவங்க?

குடிமகன் : அவங்க உரிமையோட அடிக்கிற ஸ்டைலைப் பார்த்தே, யாரோ அரசியல்வாதிங்கதான்னு நானே புரிஞ்சுகிட்டு ஒதுங்கிட்டேன்.

தி.மு.க. கௌன்ஸிலர் : கார்லே கட்சிக் கொடி இருக்கிறதைப் பார்த்த பிறகும், சிலர் மரியாதையில்லாம எதிர்லே வர்றதுதான் பிரச்சனைக்குக் காரணம். இப்படித்தான் ஒரு தடவை நானும் எம்.எல்.ஏ. அண்ணனும் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்லே சாப்பிட்டுட்டு, டான்ஸ் பார்த்துட்டு, டயர்டா ராத்திரி ஒரு மணிக்கு ஒரு டீக்கடையிலே நுழைஞ்சோம். டீயைக் குடிச்சிட்டுப் பார்த்தா, திமிரா பில்லை நீட்டறார் அந்த சப்ளையர்.

நி.தொ. : நீங்க குடிச்ச டீக்குத்தானே பில் கொடுத்தாரு?

தி.மு.க. கௌன்ஸிலர் : அட, யார் குடிச்சா என்ன? அதுவா பிரச்சனை? டி.வி., கேஸ் ஸ்டவ்னு இந்த அரசு எவ்வளவோ இலவசமா கொடுக்குது. எல்லாத்தையும் ஓசியிலே வாங்கிட்டு, நன்றியில்லாம எங்க கிட்டேயே டீக்கு காசு கேக்கறது என்ன நியாயம்? இப்படித்தான் பிரச்சனை ஆரம்பிக்குது. கோபத்திலே டேபிளையும், சேரையும் உடைச்ச பிறகு, முதலாளியே வந்து மன்னிப்பு கேட்டுக்கிட்டார்.

நி.தொ. : அரசு பல இலவசங்களை வழங்கும்போது, மக்களும் சில தியாகங்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது. அடுத்து – உங்க அனுபவத்தைச் சொல்லுங்க ஸார்.

குடிமகன் : நான் போக்குவரத்துக் கழகத்திலே செக்கிங் இன்ஸ்பெக்டரா இருக்கேன். ஒருநாள் பஸ்லே ஏறி டிக்கெட் செக் பண்ணும்போது, என் கெட்ட நேரம் – ஒரு ஆளும் கட்சி எம்.எல்.ஏ. வீட்டு நைட் வாச்மேன்கிட்டே ‘டிக்கெட் இருக்குதா’ன்னு கேட்டுட்டேன். ‘யாரைப் பார்த்து டிக்கெட் கேக்கறே? உங்க அப்பன் வீட்டு ட்ரான்ஸ்போர்ட் டிபார்ட்மென்ட்டா?’ன்னு சண்டைக்கு வந்துட்டாரு.

நி.தொ. : அடாடா...

குடிமகன் : விஷயம் தெரிஞ்சு எங்க டிபார்ட்மென்ட்லே என்னை சஸ்பென்ட் பண்ணிட்டாங்க. அப்புறம் நானே அந்த எம்.எல்.ஏ.வைப் பார்த்து, ‘இனிமே ஒழுங்கா நடந்துக்கறேன்’னு சொன்ன பிறகுதான், நாலு தட்டு தட்டி என்னை விட்டுட்டாங்க. வேலையும் திரும்ப கிடைச்சிருச்சு.

நி.தொ. : ஆளும் தரப்பு அரசியல்வாதிகளுக்கும் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் அடையாள அட்டை இல்லாததால இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்துடுது. இந்த நிகழ்ச்சியின் மூலம் இக்குறையை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறோம். ஓகே... அதுக்குப் பிறகு பிரச்சனை ஒண்ணும் இல்லையே..?

குடிமகன் : எப்படிங்க பிரச்சனை வரும்? நான் வேலையைத்தான் விடலையே தவிர, செக் பண்றதை விட்டுட்டேன்லே? நான் பாட்டுக்கும் நான் உண்டு, என் வேலை இல்லைன்னு சைலண்டா பஸ் ஸ்டேண்ட்லே கொஞ்ச நேரம் நின்னுட்டு டூட்டியை முடிச்சுக்கறேன். லைஃப் ஸ்மூத்தாப் போகுது.

மாவட்டச் செயலாளர் : நாங்களா யாரையும் விருப்பப்பட்டு அடிக்கிறதில்லைங்க. கலைஞர் எங்களை அப்படி வளர்க்லை. மக்களோ அதிகாரிகளோ அவங்களாவே வந்து மாட்டிக்கும்போதுதான் பிரச்சனை வருது.

நி.தொ. : உங்க அனுபவத்தை நேயர்களுக்குச் சொல்லுங்களேன்.

மா.செயலாளர் : ஒருநாள் எங்க கட்சி கிளைச் செயலாளர் என் வீட்டுக்கு வந்தாருங்க. ‘அண்ணே, நான் அரசியல்லே இருக்கணுமா, வேண்டாமா? தேர்தல்லே வீடு வீடா பணம் கொடுத்து ஓட்டு சேகரிச்ச எனக்கு மரியாதையே இல்லையா?’ன்னு கதறி அழுதாரு. பரிதாபமா இருந்தது.

நி.தொ. : அப்படி என்ன நடந்தது?

மா.செயலாளர் : சின்ன விஷயம்ங்க. நம்ம கிளைச் செயலாளர் மணல் கான்ட்ராக்ட் எடுத்திருக்காரு. மணல் எடுக்கிறதுக்கான பெர்மிட்டோடதான் போயிருக்காரு. கூடுதலா ஒரு 38 யூனிட் எடுக்கிறது மாமூல்தான். அதைத்தான் செஞ்சாரு. தலைவர், தளபதி பிறந்தநாளைக்கு பக்கம் பக்கமா விளம்பரம் கொடுக்கிறவருக்கு அந்த உரிமைகூட இல்லையா?

நி.தொ. : அதானே? அதிகாரிகள் தடுத்துட்டாங்களா?

மா.செயலாளர் : ‘நாங்க இல்லாதப்போ எவ்வளவு வேணாலும் அள்ளிக்கிட்டு போங்க. எங்க கண் எதிர்லே அள்ளாதீங்க’ன்னு சட்டம் பேசியிருக்காங்க. ‘எல்லாரும் எடுக்கும்போது நான் மட்டும் என்ன இளிச்சவாயனா? இத்தோட நாளைக்குத்தானே மணல் எடுக்கப் போறேன்?’ன்னு இவர் நியாயமாத்தான் கேட்டிருக்கார். அப்படியும் இவர் மேலே கேஸ் புக் பண்ணிட்டாங்க.

நி.தொ. : அப்புறம்?

மா.செயலாளர் : அவனுங்களைத் தேடிகிட்டு நானே எங்க ஆளுங்களோட போனேன். நாங்க வந்த விஷயம் தெரிஞ்சு அந்த அதிகாரிகள் தப்பிச்சு ஓடிட்டாங்க. கலெக்டரைப் பார்த்து ‘எங்க ஆட்சியிலே எங்களையே கேள்வி கேக்கறீங்களா? ட்ரான்ஸ்பர் போட்டாத்தான் அடங்குவீங்களா?’ன்னு கேட்டு, நாலு ஃபைலைக் கிழிச்சு எச்சரிச்ச பிறகுதான் பிரச்சனை தீர்ந்தது.

நி.தொ. : அதிகாரிகள் விதிமுறைகளை விட்டுக் கொடுத்தால்தான் ஆளும் கட்சியினர் நல்லாட்சி நடத்த முடியும் என்பதை இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. நெக்ஸ்ட்?

குடிமகன் : எல்லாத்தையும் விட்டுக் கொடுக்க முடியாது ஸார். நான் ஒரு காலேஜ் பிரின்ஸ்பால். ஒருநாள் எங்க தொகுதி எம்.எல்.ஏ.வோட பையன், காலேஜுக்கு வந்தாரு. ‘காலேஜ் ஆண்டு விழா இன்விடேஷன்லே ஏன் என் பேரைப் போடலை’ன்னு கேட்டாரு.

ி.தொ. : காலேஜ் ஆண்டு விழா இன்விடேஷன்லே எம்.எல்.ஏ. பேரைப் போடலாம். அவர் பையன் பேரை எப்படிப் போட முடியும்?

குடிமகன் : அதைத்தான் ஸார் நானும் கேட்டேன். ‘எங்க அப்பா ஊர்லே இல்லே. அவர் இல்லாதப்போ ப்ரோட்டாகால்படி நான்தானே எம்.எல்.ஏ.? அதானே கட்சி வழக்கம்? என் பேரைத்தானே சீஃப் கெஸ்ட்டா போடணும்? மரியாதையே தெரியாதா?’ன்னு கேட்டு அவரும் அவர் கூட வந்தவங்களும் என் கையை முறிச்சு, கழுத்தை வளைச்சுட்டாங்க.

நி.தொ. : அடாடா, அப்புறம் என்ன ஆச்சு?

குடிமகன் : யாருக்குத் தெரியும்? நான் இன்னைக்குக் காலையில்தான் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனேன்.


நி.தொ. : அரசியல்வாதிகளின் உணர்வுகளை பொதுமக்கள் புரிந்து கொள்ளும் பக்குவம் வரும் வரை, இத்தகைய பிரச்சனைகள் தொடரத்தான் செய்யும்...

குடிமகன் : இருந்தாலும் ஓட்டுப் போடற மக்களை... ஓட்டு...

தி.மு.க. கௌன்ஸிலர் : என்னய்யா ஓட்டு ஓட்டுன்னு மிரட்டறே? சும்மாவா ஓட்டு போட்டே? ரெண்டாயிரம் வாங்கலை? மூக்கு பிடிக்க மூணு வேளை பிரியாணி சாப்பிடலை? நன்றியில்லாம பேசினா மரியாதை கெட்டுரும்.

(ஆளும் தரப்பு அரசியல்வாதிகள், மக்கள் மீது பாய, குடிமகன்கள் சிதறி ஓடுகின்றனர்)


Offline
Profile 
  Reply with quote 

#

October 28th, 2010, 10:06 pm Top
Super Member
User avatar
Joined: February 24th, 2010, 10:58 pm
Posts: 234
Has thanked: 3 times
Been thanked: 2 times


Image

ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 "ரியல் ஹீரோக்களில்' ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.

நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலைஞரான இவர், 2002ல் சுவிட்சர்லாந்து ஓட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு செல்வதற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அங்கே முதியவர் ஒருவர் உணவுக்கு போராடும் அவலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி, வீட்டில் சமைத்து, இது போன்ற மனிதர்களை தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார். இதுவரை 1.20 கோடி பேருக்கு தினமும் காலை, மதியம், இரவு என உணவு வழங்கி வருகிறார். இதற்காக "அக்ஷயா டிரஸ்ட்' என்ற அமைப்பையும் "ஸ்பான்சர்கள்' உதவியுடன் நடத்தி வருகிறார். மதுரையை சுற்றி கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிப்பிடித்து உணவு தருகிறார். இதற்காக தனது வாழ்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இவர், சி.என்.என். வெப்சைட்டால், உலகின் தலை சிறந்த 10 ரியல் ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=115084


Offline
Profile 
  Reply with quote 

#

October 30th, 2010, 7:27 am Top
Super Member
User avatar
Joined: February 24th, 2010, 3:26 pm
Posts: 133
Has thanked: 0 time
Been thanked: 0 time


^^ Same article in Hindu

Image

Narayanan Krishnan, a 29-year-old chef from India who founded a non-profit body to feed the homeless and destitute, has been short-listed by CNN for its annual ‘Hero of the Year’ honour that recognises “everyday individuals who are changing the world.”

Mr. Krishnan is among this year’s top 10 CNN Heroes, who were selected from out of 10,000 nominations by a CNN panel comprising activists and philanthropists such as Muhammad Ali and Sir Richard Branson.

The network will announce the ‘CNN Hero of the Year,’ selected from among the top 10 people, on November 25.

Among the top 10 CNN Heroes is Magnus MacFarlane-Barrow, a Scotsman who provides free daily meals to 400,000 children; Aki Ra, a former child soldier clearing land mines in Cambodia and Anuradha Koirala, working to prevent trafficking and sexual exploitation of Nepal’s girls.

Mr. Krishnan founded his nonprofit Akshaya Trust in 2003. He has served more than 1.2 million meals - breakfast, lunch and dinner - to India’s homeless and destitute, mostly elderly people abandoned by their families and often abused.

“Mr. Krishnan brings hot meals and dignity to India’s homeless and destitute - 365 days a year,” CNN said.

The top 10 “remarkable individuals” were nominated by CNN viewers from across 100 countries for their sacrifices and accomplishments. In addition to receiving USD 25,000, each of this year’s top 10 CNN Heroes will be honoured at ‘CNN Heroes: An All-Star Tribute’ in Los Angeles on November 25.

The global broadcast, hosted by CNN’s Anderson Cooper, will culminate with the announcement of the CNN Hero of the Year, selected by the public in an online poll. The individual receiving the most votes will receive additional USD 100,000.

An award-winning chef with a five-star hotel group, Mr. Krishnan was short-listed for an elite job in Switzerland.

But a family visit home before heading to Europe changed everything, CNN said.

“I saw a very old man eating his own human waste for food,” Mr. Krishnan told CNN. “It really hurt me so much.”

Haunted by the image, Mr. Krishnan quit his job within a week. Helping the old man, Mr. Krishnan said he decided to “serve all the mentally ill destitute and people who cannot take care of themselves.”

Mr. Krishnan and his team cover nearly 125 miles in a donated van. He provides hot meals - simple vegetarian fare - that he personally prepares, packs and often hand-feeds to nearly 400 people each day.

The group’s operations cost about USD 327 a day, but sponsored donations only cover 22 days a month.

Since investing his entire savings of USD 2,500 in 2002, he has taken no salary. Due to lack of funding, the group was also forced to stop construction on Akshaya Home, Mr. Krishnan’s vision of a dormitory for the people he helps.

“Despite the demands and few comforts his lifestyle affords, Mr. Krishnan says he’s enjoying his life,” CNN added.


Offline
Profile 
  Reply with quote 

#

May 10th, 2011, 11:55 am Top
Super Member
User avatar
Joined: February 24th, 2010, 10:58 pm
Posts: 234
Has thanked: 3 times
Been thanked: 2 times


"வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது...' சில ஆண்டுகளுக்கு முன் வரை, மத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக, திராவிட கட்சிகள் இந்த கோஷத்தை எழுப்ப தவறியதில்லை. அதே திராவிட கட்சிகளின் ஆட்சியில், தமிழகத்தில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்கள் மட்டுமே, தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி அடையும் நிலையில், தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியின்றி, பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளன. தென் மாவட்டங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல, அடுத்து அமையும் அரசு என்ன செய்யவேண்டுமென வரிசைப்படுத்துகிறார் மணவாளன்.

ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரிகளில் படித்து வெளியில் வந்து வேலைவாய்ப்புகள் இன்றி தவிக்கும் இளைஞர்கள்; ஆறுகளில் தண்ணீர் வரத்து இன்மையால், விவசாயமின்றி தவிக்கும் விவசாயிகள்; கடுமையான பல மணி நேர மின்வெட்டால், சிறுதொழில்களையும் கைவிடலாமா என்ற யோசனையில் தொழில் முனைவோர் என, தென் மாவட்ட மக்களின் ஒவ்வொரு பிரிவினரும் தவித்து வருகின்றனர்.சென்னையை சுற்றி சில ஆண்டுகளில் மட்டும், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கார் தொழிற்சாலைகள், கனரக தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகள், டைடல் பார்க்குகள் அமைக்கப்படுகின்றன. சாலை, குடிநீர், கல்வி, போக்குவரத்து போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சென்னையில் கிடைப்பது இதற்கு ஒரு காரணம்.

கோவை, "தென்னகத்தின் மான்செஸ்டர்' என அழைக்கப்படும் அளவுக்கு தொழில் மயமாகி விட்டது. ஆனால், மதுரையில் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களுக்கு செல்ல ரயில்கள் உள்ளன. நான்கு மணி நேர பயண தூரத்திலுள்ள தூத்துக்குடியில் துறைமுக வசதியுள்ளது. குடிநீர், ரோடு, வேலையாட்கள் போன்ற பல வசதிகள் இருந்தும், பெரிய தொழிற்சாலைகள் மதுரையில் துவக்கப்படவில்லை.ஆங்கிலேயர் காலத்தில் துவங்கப்பட்ட மதுரா கோட்ஸ் தவிர, மற்ற நூற்பாலைகள் படிப்படியாக மூடப்பட்டு விட்டன. எவர்சில்வர் பாத்திர தொழில்கள், கைத்தறி நெசவு அழிந்து விட்டது. தெருவுக்கு தெரு இட்லி கடை, கந்து வட்டி தொழில் மட்டும் தான் கொடி கட்டி பறக்கிறது. கிரானைட் தொழிலில் தனியார் ஆதிக்கம் செலுத்தும் நிலையுள்ளது. சிவகங்கையில் கிராபைட் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியதோடு சரி; அதை விரிவுப்படுத்த மாநில அரசுகள் முனைப்பு காட்டவில்லை.

ராமநாதபுரம் இன்றும் கருவேலம் காடாக இருக்கிறது. சிவகாசியில் அச்சு, தீப்பெட்டி தொழில்கள் வளர்ச்சி பெற்றிருந்தாலும் கூட, நவீனமயமாக்கம் இல்லை. மானாமதுரை சிப்காட்டில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. இங்கு தயாரிக்கப்படும் மண்பானைகள், வெளிமாநிலங்களுக்கு சென்ற காலம் உண்டு. மண்பாண்ட தொழிலாளர்களுக்கு, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால், அத்தொழிலும் நசியும் நிலையில் உள்ளது. வைகை, காவிரி, தாமிரபரணி ஆற்று பகுதிகளில், மணல் கொள்ளை கொடி கட்டி பறக்கிறது. நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம், சொல்லி கொள்ளும்படி இல்லை. காரைக்குடி, பிள்ளையார்பட்டி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, மதுரை போன்ற சுற்றுலா தலங்கள் இருந்தும் வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் வந்து செல்லவும், அன்னிய செலாவணி ஈட்டவும், குறிப்பிடத்தக்க சிறப்பு திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

மதுரையை மையமாக வைத்து கொடைக்கானல், ராமேஸ்வரம், கன்னியாகுமரி போன்ற இடங்களுக்கு, "ஹெலிகாப்டர் சுற்றுலா' திட்டம் கண்டு கொள்ளப்படவில்லை. தென் மாவட்டங்களில் ஆண்டுதோறும் படிப்பை முடிக்கும் இளைஞர்கள், பெங்களூரு அல்லது சென்னைக்கு வேலை தேடி செல்லும் நிலை தொடர்கிறது.தென் மாவட்டங்களில், 1997ல் ஜாதிக்கலவரங்கள் ஏற்பட்ட போது, அதுகுறித்து ஆராய, சுப்ரீம் கோர்ட்டிலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதி ரத்னவேல்பாண்டியன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அரசிடம் தாக்கல் செய்த அறிக்கையில், வேலை வாய்ப்பு இல்லாததும் ஜாதிக்கலவரங்களுக்கு காரணம்; வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த தொழில்களை துவக்க வேண்டும் என பரிந்துரை செய்தது.

ஆனால், அந்த பரிந்துரைகளை அரசு ஏற்று, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி, ஜாதிக்கலவரங்களுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் புதிதாக பொறுப்பு ஏற்கும் அரசு, தென் மாவட்டங்களில் பெரிய கனரக தொழிற்சாலைகளை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுலா தலங்களை மேம்படுத்தி, சுற்றுலா பயணிகள் வந்து செல்ல வசதி செய்ய வேண்டும். தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சாரம் கிடைக்க, காற்றாலை மின்சார உற்பத்தியை அதிகரிக்க செய்ய வேண்டும்.தென் மாவட்டங்களில் நடக்கும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி, சுற்றுச்சூழலை பேண வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், சிப்காட், சிட்கோ, தொழிற்பேட்டைகளை மாவட்ட வாரியாக ஏற்படுத்த வேண்டும்.மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் தொழில், கல்வி, மக்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்தால் மட்டுமே அந்த மாநிலத்தை வளர்ச்சியடைந்ததாக ஏற்றுக் கொள்ள முடியும். அடுத்து அமையும் அரசு இதை உணர்ந்து, தென்மாவட்டங்களின் நலனில் அக்கறை காட்ட விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கே.மணவாளன், தலைவர், தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்


Offline
Profile 
  Reply with quote 

#

May 19th, 2011, 1:46 pm Top
Super Member
User avatar
Joined: February 24th, 2010, 3:26 pm
Posts: 133
Has thanked: 0 time
Been thanked: 0 time


A spate of unannounced power cuts has hit the southern districts during the past few days. Residents have been most irked by the power cuts undertaken at odd hours, causing great discomfort to elderly citizens and children.

Residents in the Old Natham Road here complained that a half-hour power cut was undertaken at around 5 a.m. on Tuesday. Residents of DRO Colony complained that in addition to the three-hour load shedding, another two bouts of power cuts, each lasting for around 30 minutes were undertaken, taking the total duration of power cut on Tuesday to four hours.

Many also voiced frustration as the scheduled load shedding was being undertaken at least half-hour early. A resident here said that while the load shedding was to commence at 9 a.m., the power was cut at 8.30 a.m. itself, throwing the cooking process off-guard. A resident of Gomathipuram said, “Power cuts between 3 a.m. and 6 a.m. are the most annoying as the scheduled three-hour load shedding sets in at 6 a.m. The power authorities can even increase the scheduled power cuts but at least they should stick to some schedule to give residents some peace.”

Similar complaints were reported from across the city and many areas in southern districts also. The rural areas were facing even more problems as they faced more disruptions in power supply.

When contacted, a senior Tamil Nadu Generation and Distribution Corporation (TANGEDCO) official told The Hindu here on Tuesday that sudden increase in power demand due to the summer season was the reason behind power cuts at odd hours. The intense heat wave was fuelling increased use of the power-intensive air-conditioners and fans. Consumption of TANGEDCO Madurai Region during the peak hours on Monday was 1,067 MW. The shortage at Madurai Region alone, which was one of the nine regions in the State, was around 100 MW on Monday.The TANGEDCO Madurai Region comprised the five southern districts of Madurai, Dindigul, Theni, Sivaganga, and Ramanathapuram. Further, the official added, power generation from wind mills had also plummeted during the last few days. Coupled with outages in equipment at power stations, the TANGEDCO had been forced to resort to these sudden power cuts to maintain grid stability.

Once the wind season, expected to set in during the last week of May, gathered pace, the official expressed hope that these problems would be resolved. With 5,446.165 MW of installed capacity, wind power meets a huge portion of the State's total demand of around 10,500 MW.

http://www.hindu.com/2011/05/19/stories ... 980200.htm


Offline
Profile 
  Reply with quote 

#

May 20th, 2011, 8:48 am Top
Active Member
User avatar
Joined: March 20th, 2011, 6:28 pm
Posts: 97
Location: Madurai,Bahrain
Has thanked: 0 time
Been thanked: 0 time


Its 4 hrs 30 minutes in Dindigul
And the same in my area in Madurai (New natham road)

_________________
MADURAI an Emerging Metropolitan city


Offline
Profile YIM 
  Reply with quote 

#

May 20th, 2011, 4:34 pm Top
Super Member
User avatar
Joined: February 24th, 2010, 3:26 pm
Posts: 133
Has thanked: 0 time
Been thanked: 0 time


மதுரையில் ஒரே நாள் இரவில் 322 பேர் கைது

மதுரை, மே 19: மாநகரில் புதன்கிழமை இரவு போலீஸார் மேற்கொண்ட சோதனையில், 322 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 12 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், வாகனச் சோதனை மூலம் 166 வழக்குகளில் ரூ. 1 லட்சத்து 12,400 அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் சட்டம், ஒழுங்குப் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்நிலையில், மதுரை மாநகரில் கடந்த 2 நாள்களாக போலீஸார் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதன்கிழமை இரவு சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸார் பெரியார் பஸ் நிலையம், கோரிப்பாளையம், தெப்பக்குளம், நெல்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மதிச்சியம் போலீஸ் நிலையத்தில் பழைய வழக்கில் சம்பந்தப்பட்டு, தலைமறைவாக இருந்துவந்த கண்ணன் என்பவர் போலீஸாரிடம் பிடிபட்டார்.
அதேபோல, செல்லூர் போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்குகளில் தொடர்பிருந்தும் தலைமறைவாக இருந்துவந்த திலீப்குமார் என்பவரும் போலீஸாரிடம் சிக்கினார். இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
மேலும், நீதிமன்ற பிடிவாரண்ட் உத்தரவுக்கு ஆளாகி தலைமறைவாக இருந்த 10 பேரையும், வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 10 பேரையும் நள்ளிரவில் போலீஸார் கைது செய்தனர்.

இவர்களைத் தவிர, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் சந்தேக நடமாட்டம் என 310 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் போலீஸ் நிலையத்திலேயே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீது சாதாரண வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அபராதம்:

நகரில் உள்ள 85 தங்கும் விடுதிகளைப் போலீஸார் சோதனையிட்டனர். அதில், சந்தேக நபர்களைப் பிடித்து தீவிர விசாரணையும் நடத்தப்பட்டது.

புதன்கிழமை இரவு போலீஸார் மேற்கொண்ட வாகனச் சோதனையின்போது, ஏராளமானோர் போதையில் வாகனத்தில் வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 79 பேர் மீது போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், விதிமுறைகள் மீறியதாகவும், உரிய ஆவணங்கள் இல்லாததாலும் வாகன ஓட்டிகள் மீது 166 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர்களிடமிருந்து ரூ. 1 லட்சத்து 12,400 அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மதுரை கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறியும், நெரிசலை ஏற்படுத்தியதாகவும் எழுந்த புகாரைத் தொடர்ந்து, ஷேர் ஆட்டோக்களை போலீஸார் சோதனையிட்டு அபராதமும் விதித்தனர்.

கோரிப்பாளையம், சிம்மக்கல் உள்ளிட்ட பகுதி பஸ் நிறுத்தங்களில் ஷேர் ஆட்டோக்களும், தனியார் மினி பஸ்களும் ஆக்கிரமித்துக் கொண்டு விதி மீறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பரவலாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்தே போக்குவரத்துப் போலீஸார் ஷேர் ஆட்டோக்களை சோதனையிட்டு, அபராதம் விதித்து வருவதாகவும் தெரிகிறது.
நகரில் 70 ஆட்டோக்களுக்கும், புறநகரில் 18 ஆட்டோக்களுக்கும் போலீஸார் அபராதம் விதித்ததாகக் கூறப்படுகிறது.
மதுரை நகரில் கடந்த இரு நாள்களாக போலீஸார் மேற்கொண்டுவரும் அதிரடி நடவடிக்கை மற்றும் சோதனைகளால், குற்றச் சம்பவங்கள் குறைந்து காணப்படுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

With the help of new government, Madurai police gets freedom to take action against rowdies. No rowdy groups near wine shop area. They removed extra seat in share auto to avoid over loading. Madurai going to gets new look! :thumbup:


Offline
Profile 
  Reply with quote 

#

May 21st, 2011, 11:32 am Top
Active Member
Joined: February 26th, 2010, 7:33 am
Posts: 93
Has thanked: 0 time
Been thanked: 0 time


Madurai city traffic police are taking some serious steps to control these share auto overload issue. They already removed extra seat provided in most of the share autos.

Image

Image Courtesy: Dinamalar


Offline
Profile 
  Reply with quote 

#

May 21st, 2011, 1:49 pm Top
Super Member
Joined: May 19th, 2011, 9:28 pm
Posts: 142
Location: Madurai(temple city)
Has thanked: 0 time
Been thanked: 0 time


^^
sema worku....

_________________
۩۞۩• »●๋Enchanting Madurai/மதுரை கெத்து டா●๋•« ۩۞۩

I am Joseph antony from skyscrapercity


Offline
Profile 
  Reply with quote 

#

June 15th, 2011, 12:06 pm Top
Senior Member
User avatar
Joined: February 24th, 2010, 1:56 pm
Posts: 279
Location: Virudhunagar, Madurai
Has thanked: 12 times
Been thanked: 3 times


Image
It was a journey from hell and back for Hansika Motwani.

Last Saturday, when the young actress was travelling from Madurai airport to the hotel where she was staying, she had quite a nightmarish experience.

Hansika, who was to join the shooting of Udhayanidhi’s Oru Kal Oru Kannadi the day after her arrival in Madurai, was travelling on the highway along with mom Dr Mona, when they witnessed a ghastly motorbike accident.

Recalling the traumatic experience, the Engeyum Kaadhal star talks about what she went through when she saw a man profusely bleeding on the road.

Hansika told DC, “I came to Madurai from Mumbai to shoot for OKOK. The company car had come to fetch us and while we were heading to our hotel, I saw a man lying on the road unconscious on a pool of blood and apparently it was a hit-and-run case. The old man was profusely bleeding because of his head injury and no one bothered to help him including my car driver who zoomed away. I felt guilty and wanted to do something for the accident victim. I yelled at my driver to go back and stop the car."

"As we got down from the car, people started gathering around us and my mom being a doctor asked for the local ambulance number and called them. Since people started recognising me, my mom asked me to get inside the car to avoid mobbing. She went along with the ambulance while I followed them in my car. Thank God! His condition was stable and we admitted him at Apollo Hospitals and waited until his wife came. We gave her some money and once the doctor said he was out of danger, we left for our hotel.”

The actress who answered a simple human call to help, asks, “This is a small human gesture. Why do people shy away from fulfilling their basic duties as human beings and not help another person in need?”

Source: http://www.deccanchronicle.com/channels ... aritan-051


Offline
Profile 
  Reply with quote 

#

June 15th, 2011, 6:08 pm Top


Madurai : What it is famous for?
by Vinayaga Moorthy / FB

Madurai : What it is famous for? (sapathu piriyarkaluku mattum)

1. Madurai Malliga poo [Jasmine flower] : Periyar Busstand
2. Masala milk : Hotel Arya Bhavan- By Night..
3. Lassi : Hotel Arya Bhavan - By night
4. Jil Jil Jigar Dhanda: Vilakku thoon, East Marret Street
5. Briyani & Apple Milk: Amsavalli
6. Briyani and Fossil Chicken: Jaffer
7. Kottu porota and Nattu kozhi muttai Omlett : Hotel Tamilnadu, Kamarajar Salai
8. Viraal Varuval : Amma Mess, Chockikulam
9. Rasam, Mutton chukka, Ayirai Meen Kuzambu : Hotel Arulanandham, Vilakku thoon
10. Curry Dosai, muttai [egg] dosai : Konar Kadai
11. Idly, Chutney, Sambar, Kara chutney and idly podi : Murugan Idli Kadai
12. Idly paaya, Porota Salna : Muniyandy Vilas
13. Fruit Mixture juice : Near Periyar Busstand
14. Cashew Macroons : Raja Barley Bakery, Nethaji Road
15. Idlis : Old Modern Restaurant, Nethaji Road
16. Roti, Green Chilly and Mango Juice: Chunkwala, Jutieswaran Koil Street
17. Bone Less Crab : Kumar Mess, Chockikulam
18. Paruthi Pal : Road Side hotel / stalls
19. Vellai appam and Karra chatni : Gopu Iyengar hotel
20. Mullu Murunga Vadai : South Masi Street in Town Hall Road
21. Soan Papdi - Arya Bhavan
22. Kothu parottas - Bhai kadai in West Masi St
23. Ginger biscuit / susberry - Vincent Bakery (West Masi St, next to old Shanthi Talkies)
24. Idli with different Chutney, Ennai Dosai : Goripalaym Mudaliar Kadai
25. Bakery -Puppy shop, Kochadai
26. Dominos Pizza, Anna Nagar
27. Sapathi World - Hindu office
28. Variaty Dosai's - Hotel Krishna -Inmayil Nanmai Tharuval Kovil Street
29. Dindigul Velu briyani
30. Cancane - variety can juice
31. Sidewalk Germans -cookies
32. Chilly Parotta From Guruprasad Hotel,Periyar Busstand,Madurai
33. Chithiral porutkaachi - delhi appalam, cauliflower roast
34. Malligai tea shop (behind outpost) - Badam milk
35. Hotel Gangagowri - special dosa
36. Ganesh mess - lunch, especially soyabeans curry
37. Simmakkal bus stop - Kaiyendhi bhavan
38. Pudur Meenakshi Bhavan - wings of fire (gobhi)
39. Jayaram Bakery (periyar busstand) - pastry
40. Pani poori (homemade sold by N.I) - near krishna garments
41. Poori, Kilangu - Hotel Abirami - Simmakkal
42. Sriram mess - wholesome lunch
43. Chilly Parotta From Guruprasad Hotel, Periyar Busstand.
44. Idiyappam with Thenga Milk [Coconut Milk] from Therkuvasal opposite Mission Hospital.
45. Fruits salad from Villakuthoun opposite Raymond's Showroom.
46. Kottu porota and Nattu kozhi muttai Omlett : Hotel Tamilagam, Kamarajar Salai
47. Meen Kulambu - Anbagam mess
48. Best pastry - Blackforest KK Nagar(opp sundaram park) this shop can compete with any pastry shop from the metros
49. Jelebi - Jagerry - Baskar Sweets, East Veli Street
50. Cashew Nut Burfi & most of the sweets - Amirtham
51. Pani Puri, Bhav Bajji - Delhiwala
52. Hot Halwa - Iruttukadai Kadai Halwa, Opp to Thanga Regal theathre
53. Kuthu Parota - Rabia, near Kali temple
54. Hot Bholiyal, snacks - Near Rajmahal
55. North Indian Sweets - Arya Bhavan, South Masi Street
56. Veg Soup - Opp to Arya Bhavan, South Masi Street
57. Coconut Stem [Thenai Kuruthu] - All over South Masi Street
58. Ragi Pottu with Sesame Oil [nal yennai] - East Marret Street
59. Pottu - near Therku Vasal mosque
60. Puffs - British Bakery, near bus stand
61. Ice Cream - Milkyway [after Amma Mess, Tallakulam]
62. Panam Marathu Briyani - Thavotusanthai
63. Boiled Groundnut [Sweje Kadala], Udith, Thadi Kelanku - Sold by walking Sales person
64. Pathani , Paruthi Pal - Street Vendors
65. Goat Milk - Early Morning milk Vendors
66. Chaina sukkat / Soman Sukkat / Koddi [dried meat variety] - Near Thavotusanthai & Krishnapuram area near Revathy Tiffin Center
67. Sacrine Mithai - Poi Poi mitha [ Mitha (sweet) in bamboo with a doll clapping] - makes Watches, Helicopter, Aeroplane - Favorites among Kids
68. Many Dosa Varieties - Hotel Supreme, Roof Top
69. Patnam pakkoda at Bhagavathin angidi, chinna kadai st
70. Sweet Beeda to Special Beeda - Central Theatre opposite
71. Paruthi Paal - Beside Dinamani Theatre
72. Pattani masaal with Sweet Poliyal - Opposite to Dinamani Theatre
73. Pakkoda and Kelangu ambat hot - Amirtham Sweets (at 11:30 am)
74. Pudu Madapam, Near Temple - To buy books, Fancy items or any temple items, cheapest in Tamilnadu.


  Reply with quote 

#

June 15th, 2011, 9:30 pm Top
Super Member
Joined: May 19th, 2011, 9:28 pm
Posts: 142
Location: Madurai(temple city)
Has thanked: 0 time
Been thanked: 0 time


^^
Can a guest post in AAM???? this is completely confusing...Do we have to use any cheat codes to post as a guest :lol: :x

_________________
۩۞۩• »●๋Enchanting Madurai/மதுரை கெத்து டா●๋•« ۩۞۩

I am Joseph antony from skyscrapercity


Offline
Profile 
  Reply with quote 
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic
 Page 3 of 8  [ 120 posts ]  »

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 2 guests


Posting Rules
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum


Forum Rules


Search for:
Jump to:  
cron