All About Madurai Now AAM on your Mobile

 All About Madurai » Madurai Education
 Education News, Schools & Colleges informations

Username: Remember Me?
Password:


Post new topic Reply to topic
 Page 17 of 17  [ 249 posts ]  »
October 4th, 2016, 5:10 pm Top
Member
Joined: June 17th, 2015, 8:44 pm
Posts: 45
Has thanked: 11 times
Been thanked: 7 times


மதுரை காமராஜர் பல்கலை.யில் வைஃபை வசதி, 220 நவீன கணினிகள் அமைக்க திட்டம்: மத்திய மனிதவள உதவிச் செயலர் ஆய்
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் மத்திய அரசின் உயர்கல்வித் துறை திட்டத்தில் வைஃபை வசதி மற்றும் 220 நவீன கணினிகள் அமைப்பது குறித்து மத்திய அரசின் மனிதவள உதவிச் செயலர் மோனிகாபிரியதர்ஷினி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இப்பல்கலைக் கழகத்துக்கு கடந்த வியாழக்கிழமை வந்த அவர் சனிக்கிழமை வரை தங்கி ஆய்வு நடத்தினார். பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுக்குள் ரூ.96 கோடி செலவிட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. உயர்கல்வித் துறையின் சிறப்புத் திட்ட நிதியின் கீழ் (ரூசா) மழைநீர் சேகரிப்பு, தடுப்பணைகள், மின்னணு நிர்வாகம், அதிநவீன உயர் மின்னணு பயன்பாட்டு நூலகம் ஆகியவற்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, மதுரை காமராஜர் பல்கலைக் கழக வளாகத்தில் மட்டும் ரூ.20 கோடியில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வரும் ஜனவரி (2017) முதல் பணிகள் தொடங்கப்படவுள்ளன. அப்போது பல்கலைக் கழக வளாகத்துக்குள் மலைப்பகுதியில் ரூ.1.09 கோடியில் 2 தடுப்பணைகள், 58 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு, பல்கலைக் கழக அனைத்துத் துறைகளிலும் ரூ.1.06 கோடியில் 220 நவீன கணினிகள் அமைக்கப்படவுள்ளன. மேலும், பல்கலைக் கழகத்தின் 420 ஏக்கர் பரப்பளவுக்கு வைஃபை வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளது. புதிய உள்கட்டமைப்பு பணிகள் நடைபெறும் இடங்களை மத்திய மனிதவள மேம்பாட்டு உதவி செயலர் மோனிகாபிரியதர்ஷினி நேரில் ஆய்வு செய்ததுடன், அதைச் செயல்படுத்தும் விதம் குறித்து பல்கலைக் கழக பதிவாளர், சிறப்பு அலுவலரிடமும் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து பல்கலைக் கழக ரூசா திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே.ரவிச்சந்திரனிடம் கேட்ட போது, அனைத்துப் பணிகளுக்கான ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும். வரும் ஆண்டில் பணிகள் தொடங்கி விடும் என்றார்.


Offline
Profile 
  Reply with quote 

#

October 5th, 2016, 8:06 am Top
Member
Joined: June 17th, 2015, 8:44 pm
Posts: 45
Has thanked: 11 times
Been thanked: 7 times


இந்திய குடிமைப்பணி தேர்வுக்கு காமராஜர் பல்கலை.யில் பய
மதுரை காமராஜர் பல்கலைக் கழக இளைஞர் நலக் கல்வித்துறை சார்பில் இந்திய குடிமைப்பணி தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மதுரை காமராஜர் பல்கலைக் கழக இளைஞர் நலக் கல்வித்துறை தலைவர் ஏ.வேளாங்கண்ணி ஜோசப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: இந்தியக் குடிமைப் பணிக்கான முதல் நிலைத் தேர்வில் பங்கேற்போருக்கு அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணிகள் பயிற்சி அகாதெமியில் ஆண்டுதோறும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சிஎஸ்ஏடி 2017 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
வரும் நவ. 20 ஆம் தேதி பயிற்சி வகுப்பில் பங்கேற்போருக்கான தெரிவுத் தேர்வு நடத்தப்படவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அத்துடன் 2017 ஆகஸ்ட் முதல் தேதியில் 21 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். தமிழக அரசின் இனச்சுழற்சி முறையில் தெரிவுத் தேர்வு நடைபெறும். தெரிவு செய்யப்படுவோருக்கான பயிற்சிகள் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி முதல் 2017 ஜூன் 17 ஆம் தேதி வரை நடைபெறும். தங்குமிடம், உணவு, பயிற்சிக்கான பாடம் உள்ளிட்டவை இலவசமாக அளிக்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழக இணையம் w‌w‌w.‌m‌k‌u‌n‌i‌v‌e‌r‌s‌i‌t‌y.‌o‌r‌g​ யிலிருந்து பதிவிறக்கம் செய்யவேண்டும். விண்ணப்பத்துடன் கல்வி, வயது, பிறந்த தேதி, இனம், நிரந்தர முகவரிக்கான சான்று நகல்களை இணைக்க வேண்டும்.
விண்ணப்பத்தை ரூ.5 அஞ்சல் முத்திரையுடன் கூடிய மற்றும் சுயமுகவரியுடன் இரு அலுவலக உறைகளை இணைத்து அனுப்ப வேண்டும். உறைகளில் ஸ்ரீள்ஹற்-2017 என எழுதி, பயிலக இயக்குநர், ஒருங்கிணைப்பாளர், அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணிகள் பயிற்சி அகாதெமி, இளைஞர் நல படிப்பியல் துறை, மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், மதுரை-625021 என்ற முகவரிக்கு வரும் 31 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0452-2458231 மற்றும் 9865655180 என்ற தொலைபேசி மற்றும் செல்லிடப் பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Dinamani


Offline
Profile 
  Reply with quote 

#

October 7th, 2016, 8:46 pm Top
Member
Joined: June 17th, 2015, 8:44 pm
Posts: 45
Has thanked: 11 times
Been thanked: 7 times


மத்திய பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படுமா காந்தி கிராம பல்கலை.?



இன்று - காந்தி கிராம பல்கலைக்கழக நிறுவனர் நாள்

சுதந்திர இந்தியாவில் அடிப்படைக்கல்வி அனைத்துத் தரப்பு மக்களிடமும் சென்றடைய மத்திய, மாநில அரசுகள் செயல் திட்டங்களைச் செயல்படுத்தி வகுத்து வருகின்றன. ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் அந்நாட்டு மக்களின் உயர்கல்வி அறிவே பெரும்பங்கு வகிக்கிறது. கல்வி மனிதனைப் பண்படுத்துகிறது. நெறிப்படுத்துகிறது. இந்தக் கருத்தினை முன்வைத்தே தேசப் பிதாவும், ‘கிராமம் உயர நாடு உயரும்’ என்ற கொள்கையை முன் வைத்தார்.



காந்தியடிகளின் இந்த கொள் கையைத் தன் வாழ்வின் முழு மூச்சாகக் கொண்ட மதுரை டிவிஎஸ் குழுமத்தை சேர்ந்த டாக்டர். டி. எஸ். சௌந்தரம் அம்மையார், அவரது கணவர் டாக்டர்.ஜி. இராமச்சந்திரன் ஆகியோர் தம் பெருமுயற்சியால் 1947-ஆம் ஆண்டு திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல்லிலிருந்து 12 கி.மீ தொலைவில் காந்திகிராமம்’ என்ற முன் மாதிரி கிராமம் உருவானது.

இந்தியாவில் மூன்று இடங்களில் (அருணாச்சலப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு) மட்டுமே காந்தியின் பெயரால் கிராமங்கள் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் முயற்சியால் தற்போதுள்ள காந்தி கிராம நிகர்நிலைப் பல்கலைக் கழகம், காந்தி கிராமத்தில் உருவானது. இன்று டாக்டர்.ஜி. இராமச்சந்திரனின் 113வது பிறந்த நாள். இந்த நாள், ஒவ்வொரு ஆண்டும் நிறுவனர் நாளாக கொண்டாப்படுகிறது.



இதுகுறித்து காந்தி கிராம பல்கலைக்கழக தமிழ்துறை உதவிப் பேராசிரியர் சி.சிதம்பரம் கூறியதாவது:

காந்திகிரா மத்தில் சௌந்தரம் அம்மையாரும், அவரது கணவர் டாக்டர் ஜி.ராமச் சந்திரனும் கிராமப்புற மக்களின் மேப்பாட் டிற்காக முதலில் ஒரு ஆரம்பப் பள்ளியைத் தொடங்கினர். இந்தச் சிறு தொட க்கம், படிப்படியாக வளர்ச்சி பெற்று காந்திகிராம அறக் கட்டளையாக உருவானது. இந்த அறக்கட்டளையை நிறு வுவதற்கு இடம்கொடுத்து உதவியதில், அருகில் உள்ள சின்னாளபட்டி மக்களின் பங்கு அளப்பெரிது. பிறகு 1956-ஆம் ஆண்டு ஒரு சிறிய கிராமப்புறக் கல்லூரியாகத் தொடங்கப்பட்டது. இந்தியாவில் 14 இடங்களில் கிராமப்புற முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்ட நிறுவனங்களில் இன்று காந்திகிராம நிறுவனம் மட்டுமே இன்று தழைத்து ஓங்கி நிற்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

1976-ஆம் ஆண்டு இந்திய அரசின், தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்து ள்ளது. தமிழ், இந்திய மொழிகள், கிராமியக் கலைகள், அயல்நாட்டு மொழிகள், சமூகவியல், கிராம வளர்ச்சி, கிராமப்புற தொழில் வளர்ச்சி, ஊரக சுகாதாரம் மற்றும் நலவாழ்வு, காந்திய சிந்தனை மற்றும் அமைதியியல், அரசியல் மற்றும் வளர்ச்சி நிர்வாகம், கூட்டுறவு, வாழ்நாள் கல்வியியல் மற்றும் விரிவாக்கக் கல்வி, வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு, உடற்கல்வியியல், கல்வியியல் போன்ற கிராமப்புற மேம்பாடு சார்ந்த துறைகளுடன் இயற்பியல், வேதியியல், கணிதவியல், கணினியியல், எதிர் காலவியல், மகளிரியல், உயிரியல், மனையியல், ஆடை வடிவமைப்பு போன்ற பல நவீனத் துறைகளையும் கொண்டு மாணவர்களுக்கு நிறைவான உயர்வான உயர்கல்வி சேவையை காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது.

பட்டயச் சான்றிதழ், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், இளமுனைவர் பட்டம், முனை வர் பட்டம் ஆகியவற்றை மாணவர்களுக்காக வழங்குகிறது. மத்திய பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிராமப்பு மாணவர்களும் மக்களும் பயனுற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக சௌந்திரம் அம்மாவும், ஜி. இராமச்சந்திரன் மாமாவும் நிறுவிய காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் 1976 ஆகஸ்ட் 3-ஆம் நாள் மத்திய அரசால் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக மாறினாலும் 1956-இல் கிராமப்புறக் கல்லூரியாக ஏற்படுத்தப்பட்ட பொழுதே நிறுவனர் துணைவேந்தர் ஜி. இராமச்சந்திரனின் பெயராலேயே நூலகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பிறகு 1987-ஆம் ஆண்டு தற்பொழுது உள்ள கட்டிடத்திற்கு (12,600 சதுரடி பரப்பளவில்) இடமாற்றம் செய்யப்பட்டது. இக்கட்டிடம் இரண்டு தளங் களைக் கொண்டது. இங்கு நூல்களை கையாளும் பகுதி, தொழில்நுட்பப் பிரிவு, குறிப்பு உரை புத்தகப்பிரிவு, புத்தகங்களைக் கணினி வழித்தேடும் பிரிவு, நேரடி மின் இதழ் இணைய வழி பொது வசதி, அனுமதி பட்டியல், இணைய சேவைகள், புத்தக தரவுப்பட்டியல் தேடுதல், தொடர் தரவுத்தளம் தேடுதல் பகுதி, மின் இதழ்கள் பெறும் வசதி, வாசகர்களை வழிகாட்டும் வகையில் அமைந்த நூற்பட்டியல் சேவை, வளாகக் கல்வியாளர்கள் (2002-2009) பற்றிய புதிய வெளியீ டுகள் எனப் பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியதாக நூலகம் அமைந் துள்ளது, என்றார்.

The Hindu


Offline
Profile 
  Reply with quote 

#

October 12th, 2016, 8:26 am Top
Member
Joined: June 17th, 2015, 8:44 pm
Posts: 45
Has thanked: 11 times
Been thanked: 7 times


அரிசியில் எழுதி கல்வியை தொடங்கிய மழலைகள

மதுரையில் விஜயதசமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை முதன்முதலில் பள்ளியில் சேரும் குழந்தைகள் அரசியில் எழுதும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறையில் உள்ள ஸ்ரீசாரதா வித்யாவனம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் 50 குழந்தைகள் பங்கேற்றனர். அவர்கள் தங்களது பெற்றோர் மடியில் அமர்ந்ததும், மழலைகளின் கை விரல்களைப் பிடித்த பெற்றோர் பித்தளைத் தாம்பளத்தில் நிரம்பியிருந்த அரிசியில் ஓம் நமோ நாராயணா என எழுதினர். பின்னர் உலகத்தை குறிக்கும் உ என்றும், அதன்பின் அ, ஆ என குழந்தைகளை பெற்றோர் எழுத வைத்தனர்.

முன்னதாக வித்யாரம்பம் சிறப்பு ஹோமமும் நடைபெற்றது. அதில் குழந்தைகள் கல்வி சிறக்க சிவாச்சாரியார்கள் பூஜைகள் நடத்தினர். நிகழ்ச்சியில் ஹிந்து ஆலயப் பாதுகாப்புக் குழு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆர்.சண்முகசுந்தரம் மற்றும் குழு மாநிலப் பொதுச்செயலர் பி.சுந்தரவடிவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.



Dinamani


Offline
Profile 
  Reply with quote 

#

October 15th, 2016, 4:14 pm Top
Member
Joined: June 17th, 2015, 8:44 pm
Posts: 45
Has thanked: 11 times
Been thanked: 7 times


மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள்?- கட்டமைப்பு வசதியை அதிகரிக்க மத்திய அரசு ரூ. 8 கோடி ஒதுக்கீடு



மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் வரும் கல்வியாண்டு முதல் கூடுதலாக 100 எம்பிபிஎஸ் சீட் அதிகரிக்கப்படுகிறது. இதற்கான கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க மத்திய அரசு ரூ. 8 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த கல்வி ஆண்டு வரை, 155 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்த கல்வி ஆண்டு முதல் 100 எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க, மருத்துவமனை நிர்வாகம் தீவிர முயற்சி செய்தது.



மத்திய அரசும் அதற்கு ஒப்புதல் அளிக்க தயாராக இருந்ததால், கூடுதலாக 100 இடங்களை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை உறுதி செய்ய, இந்திய மருத்துவக் கவுன்சில் குழு எந்த நேரத்திலும் மதுரை மருத்துவக் கல்லூரி ஆய்வுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. மருத்துவமனை பவள விழாவில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரும், நடப்பு கல்வி ஆண்டில் 100 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உறுதி அளித்தார். ஆனால், கடைசி வரை இந்திய மருத்துவக் கவுன்சில் மருத்துவக் கல்லூரி ஆய்வுக்கு வரவில்லை.

இந்நிலையில், நடப்பு ஆண்டில் 5 இடங்கள் குறைக்கப்பட்டு 150 இடங்களுக்கே மாணவர் சேர்க்கை நடந்தது. அதனால், மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது. ஆனாலும், 100 இடங்களை அதிகரிப்பதற்கான முயற்சியை மருத்துவமனை நிர்வாகம் கைவிடவில்லை.

தற்போது மத்திய அரசு, மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் அடுத்த கல்வி ஆண்டு முதல் 100 எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்கத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க முதற்கட்டமாக ரூ. 7.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் நோயாளிகள் வருகையில் மதுரை அரசு மருத்து வமனை முதலிடத்தில் இருக்கிறது. அதிகமான அறுவை சிகிச்சைகள், உயர்ரக உயிர் காக்கும் சிகிச்சைகள் நடக்கின்றன.

250 எம்பிபிஸ் இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்துவ தற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மதுரை மருத்துவக் கல்லூரியில் இருக்கிறது. இதை உறுதி செய்ய இந்திய மருத்துவக் கவுன்சில் விரைவில் ஆய்வுநடத்த வர உள்ளது. அவர்கள் வருவதற்கு முன், மருத்துவக் கல்லூரியை ஆய்வுக்கு முழுமையாக தயா ர்படுத்துவதற்கான பணிகள் நடக்கிறது. தற்போது மத்திய அரசு கல்லூரியின் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க ரூ.7.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால், அடுத்த கல்வி ஆண்டில் 100 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்க அதிகபட்ச வாய்ப்புள்ளது என்றார்.





தி இந்து


Offline
Profile 
  Reply with quote 

#

October 21st, 2016, 8:08 pm Top
Super Member
Joined: December 12th, 2013, 3:16 pm
Posts: 237
Has thanked: 120 times
Been thanked: 15 times


IITs are being established in the states of Himachal Pradesh, Jammu & Kashmir and Kerala, while the present SG & CG have conveniently forgotten setting up of an IIT at Madurai. it is indeed very regrettable that the denizens of Madurai too have neither realised the importance and benefits , such institutions / projects bring up. They have to break the barrier of inferiority and make strong demands in one voice. our M.P's actions leave much to be desired , who is in a passive mode always. since the mainstream media too do not adequately report / highlight the demands for such facilities in and around Madurai, public forums like "AAM' should pitch strongly for more industries, higher education institutions, better infrastructure and a lot more , which have all along been denied to Madurai and its suburbs. first of all we as well wishers of Madurai , shoulg have a consensus and sensitize the public of Madurai . we can achieve many things only through consistent struggles, otherwise we are doomed.


Offline
Profile 
  Reply with quote 

#

March 2nd, 2017, 10:20 pm Top
Super Member
Joined: December 12th, 2013, 3:16 pm
Posts: 237
Has thanked: 120 times
Been thanked: 15 times


Madurai needs many more CBSE stream schools and a steady , heavy investment in establishing excellent educational institutions. we severely lag behind in this sector , when compared to other places. it is intriguing , as to what holds back our city based big businessmen and industrialists , to start ventures in this field.


Offline
Profile 
  Reply with quote 

#

April 30th, 2017, 11:16 pm Top
Super Member
Joined: December 12th, 2013, 3:16 pm
Posts: 237
Has thanked: 120 times
Been thanked: 15 times


Long established and well founded Matriculation schools of Madurai ( Matric stream itself has been scrapped and the very name is in itself misleading!) should switch to the CBSE stream. Our Madurai earlier boasted of many CBSE affiliated schools , even during the 1972- 1990 era). for instance the YWCA schools, the seventh day adve4ntist schools were exclusively of CBSE pattern. later due to low public demand , when only high- mark scoring and rote learning became the norm , these schools had to switch , to Matriculate syllabus. what a pity! now for our city to go forward in the field of education qualITY CBSE stream Schools have to come up many more . on;ly then our city can be a front runner. we sincerely hope our Madurai will rise to the occassion.


Offline
Profile 
  Reply with quote 

#

May 1st, 2017, 11:32 am Top
Joined: May 1st, 2017, 11:26 am
Posts: 3
Has thanked: 0 time
Been thanked: 0 time


Bro, U r doing great job..pls give ur support for my facebook page Emerging Madurai


Offline
Profile 
  Reply with quote 
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic
 Page 17 of 17  [ 249 posts ]  »

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 1 guest


Posting Rules
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum


Forum Rules


Search for:
Jump to:  
cron