All About Madurai Now AAM on your Mobile

 All About Madurai » Madurai Entertainment, Hotels & Tourism
 Madurai History & Tourism

Username: Remember Me?
Password:


Post new topic Reply to topic
 Page 22 of 24  [ 349 posts ]  »
August 17th, 2014, 2:47 pm Top
Supreme Member
Joined: July 8th, 2012, 4:24 pm
Posts: 614
Has thanked: 57 times
Been thanked: 60 times


^^ ^^

Image

Image


Offline
Profile 
  Reply with quote 

#

August 17th, 2014, 2:48 pm Top
Supreme Member
Joined: July 8th, 2012, 4:24 pm
Posts: 614
Has thanked: 57 times
Been thanked: 60 times


^^ ^^


Image

Image


Offline
Profile 
  Reply with quote 

#

August 17th, 2014, 2:49 pm Top
Supreme Member
Joined: July 8th, 2012, 4:24 pm
Posts: 614
Has thanked: 57 times
Been thanked: 60 times


^^ ^^

Image

Image


Offline
Profile 
  Reply with quote 

#

August 17th, 2014, 2:51 pm Top
Supreme Member
Joined: July 8th, 2012, 4:24 pm
Posts: 614
Has thanked: 57 times
Been thanked: 60 times


^^ ^^


Image

Image


Offline
Profile 
  Reply with quote 

#

August 20th, 2014, 11:27 am Top
Supreme Member
Joined: July 8th, 2012, 4:24 pm
Posts: 614
Has thanked: 57 times
Been thanked: 60 times


Towards protection of endangered species in Madurai


The Meghamalai Wildlife Sanctuary is home to LTMs, a species endemic to the Western Ghats, and Nilgiri Tahr, the State animal of Tamil Nadu.

Making the Meghamalai Wildlife Sanctuary a tiger reserve will not only give protection to tigers but also to other highly endangered species such as Nilgiri Tahr and Lion-Tailed Macaques (LTMs), say naturalists.

There is a proposal to create a tiger reserve in the State that will include the Meghamalai Wildlife Sanctuary and Srivilliputtur Grizzled Giant Squirrel sanctuaries.

The Meghamalai Wildlife Sanctuary is home to LTMs, a species endemic to the Western Ghats, and Nilgiri Tahr, the State animal of Tamil Nadu.

According to naturalists, the LTMs are rainforest species and live under continuous canopy.

The presence of the Macaque species indicates that a forest is healthy, they point out.

“There are less than 3,000 LTMs in the world at present. Not less than 300 LTMs are expected to be found in the Meghamalai Wildlife Division alone,” said C. P. Rajkumar of Vaigai Association for Nature and Mountain Ranges (VANAM), an environmental organisation based in Theni.

An individual animal survey has to be done to determine the population of the Macaque species and Nilgiri Tahr in the division, he added.

A study on primates in Highwavys mountains of the Meghamalai division in 2011 indicated that the population of LTMs in the mountains needed proper attention because their habitat remained outside the protected area.

As many as eight groups of LTMs were spotted on the mountains. All eight groups were sighted in private estates which were a barrier for their movement, according to the study. The individual count of the primate species was not less than 266, it had stated.

Highwavys mountains are home to five species of primates which are the Nilgiri Langur, Hanuman Langur, Bonnet Macaque, Lion-Tailed Macaque and Slender Lories.
Proper study needed
According to naturalists, a proper study of the five primate species should be conducted in the Highwavys mountains, Periyar Tiger Reserve and Grizzled Squirrel Wildlife Sanctuary.


http://www.thehindu.com/news/cities/Madurai/towards-protection-of-endangered-species-in-madurai/article6334217.ece


Offline
Profile 
  Reply with quote 

#

August 20th, 2014, 11:32 am Top
Supreme Member
Joined: July 8th, 2012, 4:24 pm
Posts: 614
Has thanked: 57 times
Been thanked: 60 times


^^ ^^


Image


Offline
Profile 
  Reply with quote 

#

August 22nd, 2014, 12:51 pm Top
Supreme Member
Joined: July 8th, 2012, 4:24 pm
Posts: 614
Has thanked: 57 times
Been thanked: 60 times


Tourists can take to the skies in Kodaikanal



The view from above is always better—and that's exactly what the Kodaikanal administration is planning to provide tourists. The district administration has just approved the launch of paragliding, parachuting, parasailing and hang gliding for tourist.

"It will be an exciting addition to the usual tourist fare. School students will also get to learn paragliding. Permission has been given by the district administration to attract tourists. Locals also support the move," said N Venkatachalam, Dindigul district collector.

The adventure activities will only be open to those have certification as professional gliders. For those who do not have any such training, a basic three-day course on gliding will be provided. P Babu, better known as 'Glider' Babu will coach the learners. "The fees have not been fixed yet. The activities will be inaugurated on Saturday in the presence of higher officials from the district administration. We are also planning to provide free coaching for government school students," Babu said. "Safety would be our primary focus. I have been training school students in Coimbatore, personnel from Indian coast guard and others," he said.

Mannavanur, 25 km from Kodaikanal town, is the perfect place for this activity as the weather and wind conditions are right. Hundreds of acres of meadows are available. The forest department has been promoting the destination and adventure activities will attract more visitors.

"Beginners courses would be three to four days and intermediate courses 10 days. The advanced courses take 20 days or more. Courses would be available in all paragliding, hand gliding and para sailing," Babu said. Kodaikanal is situated at an altitude of 7,000 feet above sea level.

http://timesofindia.indiatimes.com/city/madurai/Tourists-can-take-to-the-skies-in-Kodaikanal/articleshow/40628468.cms

Helicopter tourism disappeared and now paragliding?


Offline
Profile 
  Reply with quote 

#

August 23rd, 2014, 1:17 pm Top
Supreme Member
Joined: July 8th, 2012, 4:24 pm
Posts: 614
Has thanked: 57 times
Been thanked: 60 times


மானம் காத்த மதுரை


நதிக்கரை நாகரிகங்கள் தோன்றிய காலம் முதல் நைல் நதி நாகரிகம், சிந்துநதி நாகரிகம் என உலகம் முழுதும் இருக்கக்கூடியதைப் போன்று, 2000ம் ஆண்டு பழமையான, இன்றும் உயிரோடு இயங்கிக் கொண்டிருப்பது மதுரை, அதன் வைகை நதிக்கரையில் தான்.சில ஊர்கள் காலவரலாற்றில் மறைந்துவிட்டன. பெரிய நகரங்கள் இடம்பெயர்ந்து விட்டன. புராண, வரலாற்று, இலக்கியக் காலம் துவங்கி இன்று வரை திரைத்துறையா... பேச்சுத்துறையா.... எந்தத் துறையிலும் கலை, இலக்கியம் சார்ந்த விஷயங்களில் முன்னோடியாக இருப்பது, மதுரையின் வேர்கள் தான்.மதுரைக்கு நிறைய பெயர்கள் உண்டு. கடம்பவனம், ஆலவாய், நான்மாடக்கூடல், மருதை, மதிரை, மதுரை... சொல்லிக் கொண்டே போகலாம். மதுரையின் பெயர்க்காரணங்களை கல்வெட்டு, புராண, இலக்கிய காலம் தொட்டு ஆதாரமாகச் சொல்லமுடியும்.கல்வெட்டுச் சான்று: தொல்லியல் துறை அறிஞர் வேதாச்சலம் கூற்றுப்படி கல்வெட்டுக்களில் 'மதிரை' என்று தான் கூறப்படுகிறது. அழகர்கோவிலில் உள்ள கல்வெட்டிலும், திண்டுக்கல் நிலக்கோட்டை அருகிலுள்ள அணைப்பட்டி (சித்தர்கள் நத்தம்) கல்வெட்டிலும் 'மதிரை' என்றே குறிப்பிடப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் பாண்டிய நாடு மதுரைக் காண்டம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னமும் கிராமப்புறங்களில் சொல்வழக்கில் உள்ள சொல் என்ன தெரியுமா? 'நாங்க மருதக்காரங்க' தான்.

இலக்கியத்திலும் எடுத்துக்காட்டு:

பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக்காஞ்சியை, இரண்டாம் நூற்றாண்டில் மாங்குடி மருதனார் எழுதினார். இந்தக்காலத்தில் நூல் வெளியீட்டு விழா நடத்துவது போல, அந்தக்காலத்தில் நூல் அரங்கேற்ற விழா நடத்தப்பட்டது. அரங்கம் ஏற்றுக்கொண்டால் தான் நூலாக வெளியிடமுடியும். அத்தகைய சிறப்புமிக்க மதுரைக்காஞ்சியை மாங்குடி மருதனார், திருவோண நன்னாளில் அரங்கேற்றம் செய்தது மதுரையில் தான்.மதுரைக்காஞ்சியில் மதுரையின் இரவும், பகலுமான முழுநாள் நிகழ்வை நேர்முக வர்ணனையாக கூறியிருப்பார் மாங்குடி மருதனார். தூங்காநகரம் என்ற பெயர் தானாக வந்ததில்லை. அங்காடிகள் என்றால் கடைகள்; அல் என்றால் இரவு. மதுரைக்காஞ்சியில் 'அல்லங்காடி' என குறிப்பிடப்பட்டிருக்கும்.புராணமும் புகழ்பாடும்: சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 60 விளையாடல்கள் நிகழ்த்திய இடம் மதுரை தான். வீதிகள் தோறும் திருவிளையாடல் நடந்ததாக கூறப்படுகிறது. ஆதரவற்ற கிழவிக்காக பிட்டுக்கு மண் சுமந்து, மன்னனிடம் பிரம்படி பட்ட சிவபெருமானின் திருவிளையாடல் நடந்ததும் இங்கு தான். மதுரை மக்களுக்காக சிவபெருமானே பிரம்படி பட்டதாக கூறுவதுண்டு. திருவிளையாடல் புராணத்தில் ஆலவாய், கூடல் காண்டம் என்ற பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

ஏடு நின்ற வரலாறு:

ஏழாம் நூற்றாண்டில் சமண மதம் மேலோங்கி நின்றது. சைவ சமயத்தை நிலைநாட்ட வந்த திருஞானசம்பந்தர், சமணர்களோடு போராடி, அனல்வாதம், புனல்வாதம் செய்தது மதுரையில் தான். எந்தசமயம் உயர்ந்தது என்பதை நிறுவ, தங்கள் மதத்தின் பெருமைகளை திருஞானசம்பந்தரும், சமணர்களும் ஏடுகளில் எழுதி வைகையாற்றில் இட்டனர். ஞானசம்பந்தரின் ஏடு வைகையாற்றில் எதிரேறிச் சென்று சோழவந்தான் அருகே திருவேடகம் என்ற ஊரைச் சேர்ந்தது. அந்த ஊர் இன்றும் திருவேடகம் என்றழைக்கப்படுகிறது. சமணர்களின் ஏடு நீரின் வழியே சென்று திருப்பாச்சேத்தியில் சேர்ந்தது என்பர். ஆற்றோடு போன இடம் திருப்பாச்சேத்தி. அதாவது பாட்டு போய் சேர்ந்த இடம் என்று பொருள்.இப்போதும் நம் வீட்டு திருமணப் பத்திரிகைகளில் 'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்...' என்ற பாடலை, அச்சிடுவதுண்டு. ஆலவாய் அண்ணலும், அங்கையர்க்கண்ணி குடியிருக்கின்ற, மதுரை மீனாட்சி கோயிலில் வைத்து, திருஞானசம்பந்தர் இப்பாடலை பாடினார். எத்தனை நூற்றாண்டுகளை கடந்து, இந்த உறவு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.சைவம் மட்டுமல்ல... வைணவத்தில் பெரியாழ்வார் பொற்கிழி பெற்ற இடம் மதுரை. திருவில்லிபுத்தூரில் வடபத்திர சாயியாக காட்சி தரும் பெருமாள், பெரியாழ்வார் கனவில் வந்து, பாண்டியநாட்டின் தலைநகராகிய மதுரை சென்று, 'எது மெய்ப்பொருள் என நிலைநிறுத்துவாயாக' என்று சொன்னாராம். மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில், பெரியாழ்வார் அப்பாடலை பாடிய போது, 'பொற்கிழி' வளைந்து கொடுத்து, 'இதுதான் உண்மையான மெய்ப்பொருள்' என்று காட்டியதாம். அதைத்தான் மெய்காட்டும் பொட்டல் என்றழைத்தனர். இப்போது மேங்காட்டு பொட்டல் என்றழைக்கப்படுகிறது, என்கின்றனர்.


தரையில் கை வை:

புராணரீதியாக சொன்னால், தடாதகை பிராட்டியாகிய அன்னை மீனாட்சியை மணமுடித்த சொக்கநாதர், தான் உருவாக்கிய குண்டோதரனுக்கு உணவளிக்கச் சொல்வார். ஆனால் அவனது உணவுப்பசியை தீர்க்கமுடியாமல், அன்னை தவிக்கும் போது, குண்டோதரனை 'தரையில் கை வை' என்றாராம். பொங்கிப் பாய்ந்தது வைகை. குண்டோதரனின் தாகம் தீர்க்க உருவான வைகை நதிக்கு, வேறெந்த நதிக்கும் இல்லாத பெருமையும் உண்டு.''நாரியிடப்பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று...வாரியிடைப்புகுதாயே வையையே!'' என்று, தனிப்பாடல் கூறுகிறது. இந்தப் பாடலின் அர்த்தம் நம் மதுரையைப் பற்றிய, வைகையைப் பற்றிய பிரமிப்பை ஏற்படுத்தும். தேவர்களும், அசுரர்களும் வாசுகி என்ற பாம்பைக் கொண்டு, பாற்கடலை கடைந்தார்களாம். அப்போது வெளிவந்த நஞ்சைக் கண்டு தேவர்கள் பயந்தோடினர். தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கி விட்டு, அந்த நஞ்சை சிவபெருமானே உண்டாராம். 'சிவனுக்கே நஞ்சு கொடுத்தது கடல் தான். எனவே, எந்தக் காலத்திலும் நான் கடலோடு கலக்க மாட்டேன்' என்றதாம், வைகை நதி. தமிழகத்தில் கடலில் கலக்காத ஒரே நதி வைகை தான். வெள்ளம் பெருகினாலும், வைகை நதி ராமநாதபுரம் கண்மாயில் தான் கடைசியாக கலக்கிறது. சிவபெருமானால் உருவாக்கப்பட்ட மானமிகுந்த மதுரையின் புண்ணியநதியாம் வைகையில், இப்போது சாக்கடை கலந்து சங்கடம் தருவது வேதனை கதை.

மதுரையின் பெருமை:

2000ம் ஆண்டுக்கு முந்தைய புலவர்கள் வாழ்ந்த இடம் மதுரை தான். மணிமேகலை நூலை எழுதிய மதுரை கூலவாணிகன் சீத்தலைச்சாத்தன் மதுரைக்காரர் தான். கூலவாணிகம் என்றால் நவதானியம் என்று அர்த்தம். இப்போதும் கீழமாசி வீதிப் பகுதிகளில் நவதானியம் விற்கப்படுகிறது. மதுரையில் இளநாகனார் போன்ற புலவர்கள் வாழ்ந்தனர். கர்நாடக இசையுலகில் அசைக்கமுடியாத இடம் பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமியின் முழுப்பெயர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி தான். தூத்துக்குடியில் பிறந்து புதுச்சேரியில் இறந்த, நாடக உலகின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள், நாடகம் வளர்த்தது மதுரையில் தான். நாடகக்கலை வளர்த்த மதுரையில் (தமுக்கம் மைதானம்) அவருக்கு சிலை உள்ளது. பாடலுக்கு மணி ஐயர், மதுரை சோமு, நாதஸ்வரத்திற்கு சேதுராமன், பொன்னுசாமி... இவர்களின் பெருமையும் மதுரையைச் சார்ந்தது தான்.மதுரையில் தான் நான்காம் தமிழ்ச்சங்கத்தை பாண்டித்துரை தேவர் உருவாக்கினார். மீனாட்சியம்மன் கோயில் கட்டிய வரலாற்றை எடுத்துக் கூறும் 'கோயில் திருப்பணி மாலை' என்ற நூலை, பின்னாளில் பாண்டித்துரை தேவர் பதிப்பித்தார். இப்போதும் தமிழ்ச்சங்க ரோட்டில் சங்கம் தமிழ்ச்சங்கமாக, செந்தமிழ்க் கல்லூரியாக உள்ளது. தமிழின்பால் கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை மாற்றிக் கொண்ட பரிதிமாற் கலைஞர் என்ற சூரிய நாராயண சாஸ்திரி, மதுரைக் கல்லூரிப் பள்ளியில் படித்தவர் தான்.

சினிமாவுக்கு முன்னோடி:

மதுரை சேதுபதி பள்ளியில் ஆசிரியராக பாரதியார் பணியாற்றிய போது, 'தனிமை இரக்கம்' என்ற அவரது கவிதை, விவேகபானு பத்திரிகைக்காக மதுரையில் இருந்து தான் அச்சேறியது. தமிழ் சினிமாவின் முதல் பேசும் படம் காளிதாஸ், 1931ல் வெளிவந்தது. தமிழ் சினிமாவிற்கு பாட்டெழுதிய முதல் மதுரைக்காரர், மதுரகவி பாஸ்கரதாஸ். கோயில், இலக்கியம், இசை, நாடகம், பாட்டு... எல்லாமே மதுரையைச் சுற்றி தான். மதுரைக்காரன் என்று சொல்வதில் பெருமையில்லை. மதுரையின் பெருமையை உணர்ந்து, மதுரையின் பெருமைக்கு காரணமான வைகை நதியின் அருமை உணர்ந்து செயல்படுபவர்கள் தான், உண்மையான மதுரைக்காரர்கள். இதுதான் மதுரைக்கு பெருமை.

பைய... பைய...:

இன்னமும் மதுரைக்காரர்களின் பேச்சில் 'பைய' என்ற வார்த்தை இடம்பெறுவதுண்டு. யாராவது வேகமாக ஓடினாலோ, நடந்தாலோ, தடுக்கி விழுந்தாலோ, 'பைய... பார்த்து போ' என்பார்கள். இந்த வார்த்தையை ஏழாம் நூற்றாண்டிலேயே திருஞானசம்பந்தர் பயன்படுத்தியிருக்கிறார். ஏடுகளின் பெருமையில் திருஞானசம்பந்தரிடம் தோற்றுப் போன சமணர்கள், அவர் மதுரையில் தங்கியிருந்த மடத்திற்கு தீவைக்கின்றனர். 'மன்னனின் ஆதரவு இருப்பது தானே, இந்த நெருப்பிற்கு காரணம். இந்த நெருப்பின் வேகம் மன்னனைச் சென்று சேர வேண்டுமென நினைக்கிறார், திருஞானசம்பந்தர். 'பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே' என்று பாடுகிறார். சமணர்கள் மடத்திற்கு வைத்த நெருப்பு, மெல்லச் சென்று பாண்டியனைச் சேரட்டும் என்பதாக அர்த்தம். மதுரை 'தூங்காநகரம்' மட்டுமல்ல... சொற்களால் சாகாநகரம் என்பதும் உண்மை தான்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், மதுரை.


http://www.dinamalar.com/news_detail.asp?id=1052316


Offline
Profile 
  Reply with quote 

#

August 26th, 2014, 3:36 pm Top
Supreme Member
Joined: July 8th, 2012, 4:24 pm
Posts: 614
Has thanked: 57 times
Been thanked: 60 times


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ரூ.1.70 கோடியில் புனரமைப்பு பணி


மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளம் தெற்கு மேற்கூரை பிரிக்கப்பட்டு ரூ.ஒரு கோடியே 90 லட்சத்தில் புனரமைப்பு பணிகள் நடக்கின்றன. கிழக்கு மேற்கூரை புனரமைப்பு பணிகள் ரூ.ஒரு கோடியே 70 லட்சத்தில் துவங்கவுள்ளன.

இக்கோயில் பொற்றாமரைக்குளம் 165 அடி நீளம், 120 அடி அகலம் கொண்டது. இங்கு நிரந்தரமாக தண்ணீர் தேக்க இயலவில்லை. சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் ரவீந்தரகட் தலைமையில் பொறியாளர்கள் தள ஆய்வு செய்தனர். முப்பது ஆண்டுகளுக்கு முன் பொற்றாமரை குளத்தின் தரை தளத்தில் பதிக்கப்பட்டிருந்த பட்டியல் கற்கள் மற்றும் சிமென்ட் கான்கிரீட் அகற்றப்பட்டது. அதற்கு பதில் இரண்டு அடி ஆழத்திற்கு களிமண் நிரப்பி 2012 அக்., முதல் தண்ணீர் தேக்கப்படுகிறது. தற்போது வரை தண்ணீர் வற்றாமல் பொலிவுடன் காட்சியளிக்கிறது. இக்குளத்தின் தெற்கு மேற்கூரை பழுதானது. மேற்கூரை கற்களை அகற்றி விட்டு புதியவை பதிக்கும் பணி ரூ.ஒரு கோடியே 90 லட்சத்தில் 70 சதவீதம் முடிக்கப்பட்டது. இதையடுத்து கிழக்கு மேற்கூரையின் 36 கற்கள் அகற்றப்பட்டு ரூ.ஒரு கோடியே 70 லட்சத்தில் பணிகள் துவங்கவுள்ளன. இறுதியாக வடக்கு மற்றும் மேற்கு மேற்கூரை புனரமைப்பு பணிகள் துவங்கும்.


http://www.dinamalar.com/news_detail.asp?id=1054573


Offline
Profile 
  Reply with quote 

#

August 26th, 2014, 5:09 pm Top
Supreme Member
Joined: July 8th, 2012, 4:24 pm
Posts: 614
Has thanked: 57 times
Been thanked: 60 times


தல்லாகுளம் பெருமாள் கோயில் தெப்பக்குளம் புதுப்பொலிவு! ரூ.80 லட்சம் மதிப்பில் பராமரிப்பு துரிதம்
மதுரை : மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் தெப்பக்குளம் ரூ.80 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.

இந்து அறநிலைய துறையின் கீழ் நிர்வகிக்கப்படும், இக்கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் இரண்டரை ஏக்கர் பரப்பளவு கொண்டது. தல்லாகுளம் ரோடு- கோகலே ரோட்டை இணைக்கும் வகையில் தெப்பம் அமைந்துஉள்ளது. மாரியம்மன் தெப்பக்குளத்தை அடுத்து அழகர்கோவில் பொய்கைக்கரைப்பட்டி தெப்பக்குளம் பெரியது. மூன்றாவது இடத்தை தல்லாகுளம் தெப்பக்குளம் பிடித்துள்ளது.

கழிவுநீர் தேங்கியது: முன்பு பராமரிப்பின்றி, தெப்பக்குளத்துக்குள் கழிவுநீர் திருப்பி விடப்பட்டது. இதனால், தெப்பக்குளத்தை பக்தர்கள் பயன்படுத்துவதை தவிர்த்தனர். தெப்பக்குளத்தை பராமரித்து நிரந்தரமாக தண்ணீர் தேக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி, ரூ.80 லட்சம் மதிப்பில் தெப்பக்குளத்தை பராமரிக்கும் பணி துரிதமாக நடக்கிறது.
இதை சுற்றிலும் 'பேவர் பிளாக்' கற்களால் அழகுபடுத்தப்படுகின்றன.

நிலத்தடி நீர் உயரும்: நீர் வரத்து இல்லாததால் தல்லாகுளம் கண்மாயில் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு மூடப்பட்டு வருகிறது. தெப்பக்குளம் புதுப்பிக்கப்பட்டு நிரந்தரமாக 45 லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்கப்படவுள்ளது. அதற்கான நீர்வரத்து கால்வாய்களும் துார்வாரப்பட்டு வருகின்றன. இங்கு தண்ணீர் தேக்கும்போது, அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். தெப்பத்தின் தெற்குப்பகுதியில் சிறுவர் பூங்கா அமைத்து சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு வரவேற்பு குவிகிறது.

http://www.dinamalar.com/district_detail.asp?id=1054802


Offline
Profile 
  Reply with quote 

#

September 2nd, 2014, 12:01 pm Top
Supreme Member
Joined: July 8th, 2012, 4:24 pm
Posts: 614
Has thanked: 57 times
Been thanked: 60 times


India's Meenakshi Amman Temple Brings An Ancient Religion Alive In Brilliant Colors (Photos)

Photographs can hardly do justice to the Meenakshi Amman Temple, a Hindu temple in Madurai, India, dedicated to the goddess Parvati and her consort Shiva.

Originally a modest structure believed to have been discovered by the king of the gods, Indra, the temple underwent several large-scale renovations over the centuries to become the massive, colorful complex it is today.

The temple has five entrances and is 847 feet long and 792 feet wide with a sacred pond in the center where adherents believe Indra's Golden Lotus to have first bloomed.

Take a 360 degree tour of the site here and check out the temple in all its brilliance below:


http://www.huffingtonpost.com/2014/09/01/meenakshi-amman-temple_n_5730538.html?utm_hp_ref=religion


Offline
Profile 
  Reply with quote 

#

September 2nd, 2014, 12:04 pm Top
Supreme Member
Joined: July 8th, 2012, 4:24 pm
Posts: 614
Has thanked: 57 times
Been thanked: 60 times


^^

I tried to save the photos for posting in the photos thread but not able to save the photos.


Offline
Profile 
  Reply with quote 

#

September 6th, 2014, 1:04 pm Top
Supreme Member
Joined: July 8th, 2012, 4:24 pm
Posts: 614
Has thanked: 57 times
Been thanked: 60 times


வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தும் புதிய தொல்லியல் கண்டுபிடிப்புகள்:தொல்லியல் சுற்றுலாவில் தகவல்

மதுரை:''தொல்லியல் துறை சார்பில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சின்னங்கள் மூலம் புதிய வரலாற்று தகவல்களை தெரிவிக்கின்றன'', என தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் பேசினார்.

மதுரையில் தொல்லியல் துறை சார்பில் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்களுக்கான 15 நாள் கருத்தரங்கம் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் உள்ள தொல்லியல் சின்னங்கள் உள்ள இடங்களுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

நேற்று மாங்குளம், அரிட்டாபட்டி, அழகர்கோவில் மலைப்பகுதிகளில் உள்ள கல்வெட்டுகள் குறித்து தொல்லியல் துறை உதவி இயக்குனர் கணேசன் மற்றும் ஆய்வாளர்கள் விளக்கமளித்தனர். மீனாட்சிபுரத்தில் உள்ள மாங்குளம் சமணர் படுகையில் ஆறு இடங்களில் பொறிக்கப்பட்டுள்ள பிராமி கல்வெட்டுகள் குறித்து தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள கல்வெட்டுகளில் மிகவும் பழமையான கல்வெட்டு மாங்குளம் பிராமி கல்வெட்டு. இதில் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பெயர் இடம் பெற்றுள்ளது.

1886ல் வெளிநாட்டவரான ராபர்ட்சீகன் இந்த கல்வெட்டு மற்றும் படுகைகளை கண்டுபிடித்தார். அதன் பின்னும் இது தொடர்பான விழிப்புணர்வுகள் மக்களிடம் இல்லாமல் இருந்தது. வடமொழி எழுத்து கலப்பு இருந்ததால், இது 'வர்க்' எழுத்தை சேர்ந்தது என்ற தகவல் இருந்தது. வடமொழி எழுத்துகளுக்கு முந்தையது இந்த எழுத்துக்கள்.மிகவும் பழமையான கல்வெட்டு இதுதான் எனகருதி வந்தபோது, தேனி அருகே புள்ளிமான் கோம்பையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டின் காலத்தை ஒப்பிடுகையில், இதைவிட அது பழமையான கல்வெட்டு என தெரியவந்துள்ளது. இதன் மூலம் இன்னும் புதுமையான, பழைய வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன என்றார்.

http://www.dinamalar.com/district_detail.asp?id=1063370


Offline
Profile 
  Reply with quote 

#

September 8th, 2014, 10:46 am Top
Supreme Member
Joined: July 8th, 2012, 4:24 pm
Posts: 614
Has thanked: 57 times
Been thanked: 60 times


தொல்லியல் சின்னங்களின் அடையாளங்கள் சிதைப்பு! உள்ளூர் மக்கள் முயற்சித்தால் காக்கலாம்

மதுரையின் பெருமைகளை உலகிற்கு பறைசாற்றும் வகையில், பல இடங்களில் அமைந்துள்ள தொல்லியல் சின்னங்களை சமூகவிரோதிகள் சிதைப்பதால், பழங்கால வரலாற்று பெருமைகளை இழக்கும் அவலம் ஏற்படும் நிலை உள்ளது.

தமிழகத்தின் புராதன பழமைகளையும், சிறப்புகளையும் வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும், வரலாற்றின் எச்சங்களாக சில சின்னங்கள் மிச்சம் உள்ளன. திருமலை நாயக்கர் மகால், பத்து துாண்கள், கீழக்குயில்குடி சமணர்மலை, தென்பரங்குன்றம் உமையாண்டவர் கோயில், யானைமலை லாடன் கோயில், அரிட்டாபட்டி குடைவரை சிவன் கோயில், வரிச்சியூர் அஸ்தகிரீசுவர், உதயகிரீஸ்வரர் கோயில், தர்க்காக்குடி சிவன் கோயில், அழகர்கோவில் திருமலை நாயக்கர் மண்டபம், மாங்குளம், யானைமலை, திருவாதவூர், கருங்காலக்குடி, வரிச்சியூர், கொங்கற்புளியங்குளம் பகுதிகளில் உள்ள தமிழ் பிராமி கல்வெட்டு குகைகள் மற்றும் திருப்பரங்குன்றம், அழகர்மலை, கீழவளவு, முத்துப்பட்டி, மேட்டுப்பட்டி பகுதிகளில் உள்ள சின்னங்களை தொல்லியல் துறை பராமரிக்கிறது.

மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் இந்த அளவிற்கு எந்த மாவட்டத்திலும் பழமையான வரலாற்று பின்புலம் இல்லை. பிராமி கல்வெட்டுகள் அமைந்துள்ள இடங்கள் மலைப்பகுதிகளில் அமைந்துள்ளதால், இவற்றை தொல்லியல் துறை பாதுகாப்பதில் சிக்கல்கள் உள்ளன. ஆனால் உள்ளூர் மக்கள் நினைத்தால் மட்டுமே இவற்றை காப்பாற்ற முடியும், என்ற நிலை உள்ளது.வரலாற்று சின்னங்கள் அமைந்துள்ள இடங்களில் தொல்லியல் துறை அமைத்துள்ள கவல் போர்டுகள் உடைக்கப்பட்டும், மலைப்பகுதிகளுக்கு ஏறுவதற்காக அமைத்துள்ள இரும்பு கம்பிகள் திருடப்பட்டும், சமணர் படுகைகளில் தங்கள் பெயர்களையும் கற்களில் பொறித்தும் அதன் பெருமைகளை சமூகவிரோதிகள் சிதறடித்துள்ளனர்.மாங்குளம் அருகே மீனாட்சி புரம் சமணர் படுகைகளில் 6 இடங்களில் கல்வெட்டுகள் உள்ளன. சில இடங்களில் சமூக விரோதிகள் தங்கள் பெயர்களை பொறித்துள்ளதால், கடந்தகால வரலாறுகள் சிதைக்கப்பட்டுஉள்ளன. இதனால் வருங்கால தலைமுறையினர் தவறான தகவல்களை அறியும் நிலை உள்ளது. இதன் பாரம்பரிய பெருமைக்கு குறைவு ஏற்படும் அவலம் உள்ளது.

தொல்லியல் துறை மண்டல உதவி இயக்குனர் கணேசன் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன் சமணர் படுகைகளை சமூகவிரோதிகள் சேதப்படுத்தினர். அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. யானைமலை, கொங்கற்புளியங்குளம் போன்ற இடங்களில் மக்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மக்கள் அந்த சின்னங்களுக்கு பாதுகாப்பாக உள்ளனர். இதுபோல் தொல்லியல் சின்னங்கள் அமைந்துள்ள அனைத்து பகுதிகளிலும் மக்கள் குழுக்களை அமைத்து, அதன் பெருமைகளை அவர்களுக்கு சொல்கிறோம். உள்ளூர் மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இந்த சின்னங்களை சிக்கல்கள் இல்லாமல் எளிதாக பாதுகாக்க முடியும், என்றார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1065069


Offline
Profile 
  Reply with quote 

#

September 8th, 2014, 11:46 am Top
Supreme Member
Joined: July 8th, 2012, 4:24 pm
Posts: 614
Has thanked: 57 times
Been thanked: 60 times


நூற்றாண்டு பழம் பெருமை வாய்ந்த மதுரை தமிழ்ச் சங்கத்தின் பாரம்பரியம் காப்பாற்றப்படுமா


நிர்வாக ரீதியில் ஏற்பட்ட தனிப்பட்ட கெüரவப் பிரச்னையால் பாரம்பரியமிக்க மதுரை தமிழ்ச் சங்கம், அதைச் சார்ந்த செந்தமிழ்க் கல்லூரியின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மதுரையில் கடந்த 1901-ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற 3 நாள் சென்னை மாகாண அரசியல் மாநாட்டில் தலைமை வகித்த பாண்டித்துரைத் தேவர், தமிழ் மொழி நிலை பெற்று வளர தமிழ்ச் சங்கம் அமைக்க வேண்டும் என்றார். இதையடுத்து, மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் கூடிய தமிழ்ச் சான்றோர் தமிழ்ச் சங்கத்தை அமைக்கத் தீர்மானித்தனர்.

அதன்படி, 1901-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி மதுரை தமிழ்ச் சங்கம் உருவானது. அதன் நிறுவனராக பொன்.பாண்டித்துரைத் தேவரும், தலைவராக மன்னர் பாஸ்கர சேதுபதியும் இருந்தனர். பாஸ்கர சேதுபதி ரூ.10 ஆயிரத்தை தமிழ்ச் சங்கத்துக்கு நன்கொடையாக வழங்க, பாண்டித்துரைத் தேவர் தனது ஜமீனை விற்று சங்கத்துக்காக ரூ.1 லட்சம் வழங்கினார்.

பழைய தமிழ் நூல்கள் புதுப்பிக்கப்படவும், ஓலைச்சுவடிகள் காப்பாற்றப்படவும், தமிழறிஞர்கள் தமிழின் தொன்மையை வருங்காலத் தலைமுறைக்கு எடுத்துரைக்கும் வகையிலும் செயல்முறைகள் தீர்மானிக்கப்பட்டன.

இந்தச் சங்க வெளியீடாக தொடர்ந்துவரும் செந்தமிழ் இதழில்தான் பரிதிமாற்கலைஞர் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கக்கோரி கட்டுரை எழுதினார். இந்தச் சங்கம் 1908-இல் முறையாக அரசிடம் பதிவு பெற்றது.

சங்கத்தின் நோக்கங்களில் ஒன்றான செந்தமிழ்க் கல்லூரி 1957-இல் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் தமிழ்ப் புலவர் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது.

தற்போது, தமிழ் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகளுடன், சம்ஸ்கிருதம், கணினிவழிக் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கல்வெட்டு ஆராய்ச்சி, ஓலைச்சுவடி ஆய்வு ஆகியவையும் கற்பிக்கப்படுகின்றன. மதுரைத் தமிழ்ச் சங்கத்தை பெருமைப்படுத்தும் வகையில் கடந்த 1981-இல் மதுரையில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டபோது, வள்ளல் பொன்.பாண்டித்துரைத் தேவரின் முழு உருவச்சிலையும் நிறுவப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவால் சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருதும், ரூ.5 லட்சம் நிதியும் முதன்முறையாக வழங்கப்பட்டது.

ஆனால், கடந்த 2007 முதல் தமிழ்ச் சங்கம், கல்லூரியில் நிர்வாக ரீதியில் ஏற்பட்ட பிரச்னை நீதிமன்றத்துக்கும் சென்றுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்புவதில் சங்கத்தைத் தோற்றுவித்த பாண்டித்துரைத் தேவர் வாரிசுகளுக்கும், கல்லூரி நிர்வாகத்தில் இருப்போருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடும், யார் பெரியவர்? என்ற கெüரவப் பிரச்னையுமே சங்கத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும் வகையில் உள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

தமிழ்ச் சங்க அலுவலகத்தை யார் நிர்வகிப்பது என்ற ரீதியில் தற்போது இரு தரப்பினரும் ஈடுபட்டுள்ளதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை செந்தமிழ்க் கல்லூரியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதுகுறித்து, தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ராஜா என்.குமரன் சேதுபதியிடம் கேட்டபோது, மதுரைத் தமிழ்ச் சங்கம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் எங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, தமிழ்ச் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பழைய நிர்வாகிகளை நீக்கிவிட்டோம். சங்கத்தின் கீழ் செயல்படும் கல்லூரி நிர்வாகத்தையும் சட்டரீதியாக விரைவில் சீரமைப்போம். எங்கள் செயல்பாடுகள் தமிழ்ச் சங்கத்தின் பாரம்பரியத்தைக் காப்பதாகவே அமையும் என்றார்.

செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் ரா.குருசாமியிடம் கேட்டபோது, பிரச்னை தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. ஆகவே, சட்டரீதியாகவே நாங்கள் அணுகி வருகிறோம் என்றார்.

"ஊருணி நீர்நிறைந்தற்றே உலகளவாம், பேரறிவாளன் திரு' என்றார் வள்ளுவர்.

அறவழியில் வந்தவர்கள் பெற்ற செல்வம் ஊருணி நீர் போல யாவருக்கும் பயன்படும் என்ற அந்தக் குறள் போலவே பாண்டித்துரைத் தேவரின் செல்வத்தாலே கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த தமிழை வளர்க்க தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டது.

ஆனால், தனிப்பட்டோரின் சுய கெüரவத்துக்காக தமிழ்கூறும் நல்லுலகத்தின் வழிகாட்டியாகச் செயல்பட வேண்டிய தமிழ்ச் சங்கத்தின் பாரம்பரியத்துக்கு பாதிப்பு ஏற்படுவது சரியல்ல என்பதே நடுநிலையாளர் கருத்து.


[url]http://www.dinamani.com/tamilnadu/2014/09/08/நூற்றாண்டு-பழம்-பெருமை-வாய்/article2420181.ece[/url]


Offline
Profile 
  Reply with quote 
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic
 Page 22 of 24  [ 349 posts ]  »

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 1 guest


Posting Rules
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum


Forum Rules


Search for:
Jump to:  
cron