An exclusive forum to discuss about Madurai City...

  • AIIMS for Madurai - People movement

  • All About Madurai's Government Projects , IT Parks and Companies, Industries etc.,
All About Madurai's Government Projects , IT Parks and Companies, Industries etc.,
 #13098  by Madurai Gilli
 April 1st, 2017, 12:04 pm
AIIMS for Madurai - People Movement

Rewinding the history, in response to Central govt's request to suggest a place in Tamilnadu for establishing All India Institute of Medical Sciences (AIIMS), Tamilnadu Govt under late CM Ms.J.Jeyalalitha announced Five locations in the state to be considered as :

* Chengalpet
* Pudukottai
* Thoppur (Madurai)
* Perundurai (Erode)
* Chengipatti (Tanjore)

Following which, a high-level inspection Committee from Center visited all the five places in Tamilnadu, analysed the facilities and suggested the Central Govt that Thoppur in MADURAI is the better place among five. After a small confusion raised by the committee regarding a Gas pipe-line intersecting at a 40-acre Corner site out of total 200 acres at Thoppur, the local administration of Madurai showed 38 acres alternate site, making full-stop to the confusion.The late CM Ms.J.Jeyalalitha was also satisfied with Thoppur in Madurai, and requested Central govt. to establish AIIMS in Tamilnadu, as per the suggestions of CG Committee.

In between, after the unfortunate demise of CM Ms.Jeyalalitha and Political crisis in the state, a new Govt. is formed under Hon.Edappadi Palaniswamy.
When Central govt. decided to set-up AIIMS at Madurai and in the verge of announcing it, New CM EPS met PM Modi and personally demanded AIIMS at Tanjore instead of Madurai, for the reasons better known only to them. CM's move to hijack AIIMS from Madurai to Tanjore has irked almost everyone in Southern districts.

As a result, Industrialists, traders, Merchants, Professionals in various fields, Youngsters, Students and Common public from entire Southern districts have joined hands and given rise to "AIIMS for Madurai - Public movement"

The Forum is actively working in various ways, to make sure AIIMS is established in Thoppur, Madurai so that a total of THIRTEEN districts people, accounting approximately 2.80 Crores population who are lacking sufficient Medical facilities can be greatly benefitted !

This thread will exhibit the activities of People Movement for AIIMS in Madurai.

Image
* மருத்துவக் கல்லூரியுடன் கூடிய எய்ம்ஸ் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை தமிழகத்தில் அமைக்கப்படும் என 2014-ல் மத்திய அரசு அறிவித்தது..!

* அதனைத் தொடர்ந்து மறைந்த முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகத்தில் செங்கல்பட்டு, புதுக்கோட்டை, மதுரை தோப்பூர், பெருந்துறை மற்றும் தஞ்சை செங்கிப்பட்டி ஆகிய இடங்களைப் பரிந்துரைத்தது !

* 2015-ல் மத்திய அரசின் உயர்மட்ட நிபுணர்குழு தமிழகத்தில் 5 இடங்களையும் ஆய்வு செய்கிறது...ஆய்வின் முடிவில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை தோப்பூர் தான் தகுதியான சிறந்த இடம் என்றும் ஆனால் மொத்தமுள்ள 200 ஏக்கரில் ஒரு ஓரத்தில் 40 ஏக்கர் நிலத்துக்கு அடியில் எரிவாயு பைப்-லைன் செல்வதால், அந்த குறைக் கலையப்பட வேண்டும்
எனவும் கோரிக்கை வைத்தது !

* மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு எரிவாயு பைப்லைன் செல்லும் நிலத்துக்கு பதிலாக, புதிதாய் 38 ஏக்கர் நிலம் ஒதுக்கித்தரப்பட்டிருக்கிறது !

* மிக அருகிலேயே தமிழகத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் நால்வழிச்சாலைகள், நாட்டின் அனைத்து மெட்ரோபாலிட்டன் நகரங்களோடும் நேரடி விமான சேவையுடைய சர்வதேச விமான நிலையம், இரயில்வே துறையால் A-1 தர சான்று அளிக்கப்பட்ட இந்தியாவின் தலைச்சிறந்த 20 இரயில் நிலையங்களில் ஒன்றான மதுரை இரயில் நிலையம், மருத்துவமனை அமையவுள்ள இடத்தை ஒட்டியே தமிழக அரசால் அமைக்கப்படும் மிகப்பெரிய துணைக்கோள் நகரம், தடையில்லா மின்சாரம், தண்ணீர் வசதி என தேவையான அனைத்து உட்கட்டமைப்புகளும் தயார் நிலையில் அமைந்துள்ள மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள, மருத்துவ சேவைகள் அதிகம் தேவையுள்ள மதுரையைச் சுற்றியுள்ள *பதிமூன்று* தென்மாவட்டங்களைச் சேர்ந்த *இரண்டு கோடியே எண்பது லட்சம்* மக்கள் பயனடைவர் என அறிக்கை சமர்பிக்கப்பட்டு, எய்ம்ஸ் மதுரை தோப்பூரில் அமைக்கப்பட வேண்டும் என முடிவாகிறது !

* இதற்கான அறிவிப்பு வெளியாகும் தருவாயில், தமிழகத்தில் உருவான புதிய அரசின் முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தஞ்சாவூரில் அமைக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையைப் பத்தோடு பதினொன்றாக இணைத்து, தென்தமிழக மக்களின் கனவை சிதைத்துவிட்டு வருகிறார்..!

* இவரைத் தொடர்ந்து புதிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சரான திரு.விஜய பாஸ்கர் தலைமையிலான ஒரு அணி மார்ச்.6-ம் தேதி டில்லியில் உள்ள மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு சென்று, தமிழகத்திற்கான எய்ம்ஸ் மருத்துவமனையைத் தஞ்சாவூருக்கு அறிவிக்கக்கோரி அழுத்தம் கொடுக்கிறது..நாளுக்கு நாள் இவர்களது அழுத்தம் அதிகரித்துக் கொண்டே போக, மத்திய அரசு *ஐந்து இடங்களிலும் உள்ள வசதிகளின் அடிப்படையில் ரேங்க் பட்டியல்* தயாரித்து தருமாறு தமிழக அரசைக் கேட்கிறது !

* இந்நிகழ்வுகளை சற்றும் எதிர்பாராத, தென் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என பலதரப்பட்டோர் ஒன்றினைந்து மடீட்சியாவின் முயற்சியோடு *"மதுரையில் எய்ம்ஸ் மருதுவமனைக்கான மக்கள் இயக்கம்"* என ஒரு கூட்டியக்கத்தைத் தொடங்கி மதுரை தோப்பூரில் அமையும் சூழலிலிருந்த எய்ம்ஸ் மருத்துவமனையை சில சுயநலக் காரணங்களுக்காக தஞ்சாவூரில் அமைக்கத் துடிக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், *தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் தென் மாவட்ட மக்களின் நன்மைக்காக* எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரை தோப்பூரிலேயே அமைக்க வலியுருத்தியும் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது !

* அதன்படி கடந்த 15.03.2017 அன்று மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி (BJP),மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM) உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரும், அரசியல் சாரா இயக்கங்களும், பலதரப்பட்ட மக்களும், வணிக மற்றும் தொழில் அமைப்புகளும் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டி ஓரணியாய் கைக்கோர்த்து நின்றது ஒட்டுமொத்த தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது !

* அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (OPS), திராவிட முன்னேற்றக் கழகமும் தற்போது முழு ஆதரவு தந்துள்ளன. அதன்பின் நடைபெற்ற சிறப்பு கூட்டங்களில் Indian Medical Association, Madurai Civil Engineers Association, வழக்கறிஞர்கள் சங்கம், மாற்றுத்திறனாளிகள் சங்கம், மதுரை நகர் பகுதிகளில் உள்ள பல்வேறு Residents welfare association என எண்ணிலடங்கா மக்கள் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டி துவங்கப்பட்ட மக்கள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர் ! மக்கள் இயக்க பிரதிநிதிகள் தோப்பூரைச் சுற்றி அமைந்துள்ள உச்சப்பட்டி, வேடர் புளியங்குளம், கூத்தியார்குண்டு, கரடிக்கல், கருவேலம்பட்டி ஆகிய கிராம மக்களைச் சந்தித்து எய்ம்ஸ் மருத்துவமனையைப் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்ட போது அப்பகுதி மக்கள் தஞ்சாவூருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை மாற்ற முயற்சிக்கும் தமிழக அரசின் மீதும், தங்கள் தொகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய எந்த நடவடிக்கைகளும் எடுக்காத தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் அதிருப்தியையும், கோபத்தையும் வெளிப்படுத்தினர் !

* இந்த எழுச்சியானது தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, இராம்நாட், சிவகங்கை என அனைத்து இடங்களிலும் பரவி தென் மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்களும், பொதுமக்களும், மற்றும் பலதரப்பட்ட அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் !

* உண்ணாவிரதத்தைத் தொடார்ந்து 26.03.2017 அன்று மதுரை விஷால் டி மாலில் *மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டி மாபெரும் கையெழுத்து இயக்கம்* தொடங்கப்பட்டு வெற்றிகரமாய் ஆதரவு கிடைத்து வருகிறது !

* மேலும் மதுரை மாநகரில் *மாரத்தான் ஓட்டமும், தென்மாவட்டங்கள் அனைத்திலும் மனித சங்கிலி போராட்டம்* நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது !

* மேலும் விரைவில் *சென்னை மற்றும் புதுடில்லியிலும் ஆர்பாட்டம்* நடத்த தயாராகி வரும் மக்கள் இயக்கம், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் வரை ஓய்வதில்லை என்ற உறுதியோடு உள்ளது !

* இந்த தொடர் போராட்டாங்களை வெற்றிகரமாய் எடுத்து செல்ல என்றும் நண்பர்களின் ஆதரவு தேவை.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கத்திற்கு உங்கள் ஆதரவை
மேற்கூறிய சமூக-வலைத்தளங்களில் இணைந்து தெரிவிக்கவும்.

https://www.facebook.com/AIIMSmadurai/

https://mobile.twitter.com/AIIMSmadurai?s=04
Image
Last edited by Madurai Gilli on April 8th, 2017, 3:29 pm, edited 1 time in total.
 #13110  by Madurai Gilli
 April 1st, 2017, 12:22 pm
Madurai was late CM Hon.Ms.Jeyalalitha's choice for AIIMS in Tamilnadu.

She requested Central govt. to establish AIIMS in Tamilnadu, as per the reports submitted by the high-level inspection committee.

It's to be noted Thoppur (MADURAI) topped among the suggested locations, Considering the readily available infrastructure, marvellous Connectivity options by road, rail & air, and various other advantages.

Image